Tamil News

Sunday, January 8, 2012

படப்பிடிப்பில் விபத்து: கத்ரினா கைப் மூக்கு உடைந்தது.!!

பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப் இவர் பெயரிடப்படாத படமொன்றில் இம்ரன்கானுடன் இணைந்து நடித்து வருகிறார் இதன் படப்பிடிப்பு  அரியானாவில்  நடந்து வருகிறது.

இம்ரான்கான் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு கத்ரினாவை இழுப்பது போன்று காட்சியொன்றை படமாக்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி முனை கத்ரினா மூக்கில் குத்தியது. இதில் அவர் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. வலியால் துடித்தார். உடனடியாக டாக்டர் வர வழைக்கப்பட்டு முதலுவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் வலி குறையவில்லை. பின்னர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஏற்கனவே படப்பிடிப்பில் நடந்த ஒரு விபத்தில் கத்ரினாவுக்கு முகத்தில் அடிப்பட்டது. இப்போதும் அதே இடத்தில் காயம் பட்டதால் துடித்தார்.
 
விபத்தையொட்டி படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

No comments:

Post a Comment