ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடித்து இருக்கும் படம் '3'. இப்படத்தின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பால் ' 3 ' படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
' 3 ' படத்தின் டப்பிங் மற்றும் இதர பணிகள் நடைபெற்று வருகின்றன.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'மயக்கம் என்ன' படமும் 50 நாட்களை கடந்துள்ளதால் தனுஷ் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.
இது குறித்து தனுஷ் தனது டிவிட்டர் இணையத்தில் " மயக்கம் என்ன படம் 50 நாட்களை கடந்துள்ளது. செல்வாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மயக்கம் என்ன படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. செல்வாவும் நானும் இணைந்து மீண்டும் 2012ல் ஒரு படம் செய்ய இருக்கிறோம். அந்த படம் அமர்க்களமாக இருக்கும் " என்று தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் 'மயக்கம் என்ன' படத்தினை தொடர்ந்து ஆர்யா நடிக்கும் ' இரண்டாம் உலகம் ' படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தினை PVP சினிமாஸ் தயாரித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment