Tamil News

Sunday, January 8, 2012

11 கிலோ எடை உடையுடன் ஜீவா!.

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிக்க இருக்கும் 'முகமூடி' பட படப்பிடிப்பு எப்போது என்பது வெளியாகாமல் இருந்தது. வெளிநாடு எல்லாம் சென்று அங்கு TEST SHOOTING எல்லாம் நடத்தி வந்தார்கள். யு.டிவி நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவித்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக 'முகமூடி' படத்தினை பற்றி எதையும் பேசாமல் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் நடிக்க துவங்கினார் ஜீவா. ஜீவா நடிக்க வேண்டிய 'முகமூடி'யில் சிம்பு நடிப்பார் என்றும் மிஷ்கின் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து ஜீவா தனது டிவிட்டர் இணையத்தில் "முகமூடி படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறேன். படப்பிடிப்பு இந்த மாதம் துவங்க இருக்கிறது. 75 நாட்களுக்கு மேலாக சூப்பர் ஹீரோ உடையினை போட்டு கொண்டு நடிக்க இருக்கிறேன். 11 கிலோ எடை கொண்டது அந்த உடை. படப்பிடிப்பு ஜாலியாக இருக்க போகிறது." என்று தெரிவித்துள்ளார்.
அதுசரி! தூக்கிக்கிட்டு நடக்க முடியுமா... பாஸ்?

No comments:

Post a Comment