Tamil News

Sunday, January 15, 2012

நயன்தாராவின் மௌனம் கலையுமா?

நயன்தாராவை மீண்டும் நடிக்க கேட்டு நடிகர்கள், இயக்குநர்கள் வற்புறுத்தி வருகின்றனர். பிரபுதேவாவை விரைவில் மணக்க திட்டமிட்டுள்ள நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு போட்டார். தமிழில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் கடைசியாக நடித்த நயன்தாரா தெலுங்கில் 'ஸ்ரீராமராஜ்ஜியம்' என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். அதன்பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. பிரபுதேவா இந்தி படம் இயக்குவதில் பிஸியாகி விட்டார். இருவரின் திருமணம் எப்போது நடக்கும் என்று அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், நயன்தாராவை மீண்டும் நடிக்க கேட்டு திரையுலகினர் வற்புறுத்தி வருகின்றனர். இயக்குநர் லிங்குசாமி, வெங்கட் பிரபு, ராஜேஷ், ஏஎல்.விஜய் ஆகியோர் தங்களது படங்களில் நடிக்க கேட்டனர். அதை நயன்தாரா ஏற்கவில்லை. இதற்கிடையில் தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் அவரது கால்ஷீட் பெற முயன்று வருகின்றனர். தாசரி நாராயணராவ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகர் நாகார்ஜுனா ஆகியோர், 'நயன்தாரா மீண்டும் நடிக்க வரவேண்டும்' என்ற பகிரங்கமாக கூறி வருகின்றனர். 'மீண்டும் நடிப்பீர்களா?' என்று கேட்டால், மௌனத்தையே பதிலாக தருகிறார் நயன்தாரா. மௌனம் கலையுமானு பொறுத்திருந்து பாப்போம்!

No comments:

Post a Comment