
தமிழ் திரையுலகிற்கு 'கேடி' படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன்னா. அப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதன் பின்னர் அவர் நடித்த சில படங்களும் அவருக்கு பெயர் சொல்லும்படியாக அமையவில்லை.
பின்னர் கல்லூரி, அயன், கண்டேன் காதலை, சுறா, பையா, படிக்காதவன், சிறுத்தை என இவர் நடித்த பல படங்கள் வரவேற்பை பெற்றன.
நடிவில் தெலுங்கு திரையுலகிலும் பல்வேறு நல்ல வாய்ப்புகள் வந்ததால் தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வரவேற்பை பெற்றன.
தெலுங்கு திரையுலகில் தற்போது இவர் கொடுத்து இருக்கும் கால்ஷீட் தேதிகள் வரும் ஏப்ரல் மாதத்தோடு முடிகிறதாம். இதனால் மீண்டும் தமிழ் திரையுலகில் வலம் வர திட்டமிட்டிருக்கிறாராம் தமன்னா.
அதனால் பல்வேறு நடிகைகளின் மேனேஜர்களிடம் தயாரிப்பு நிர்வாகிகளிடமும் தமிழ் திரையுலகில் தன் அடுத்த சுற்று பற்றி பேசி வருகிறாராம்.
எந்த இயக்குனர் தன் படத்தில் நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்யப் போகிறார் என்பது இன்னும் சில வாரங்களில் தெரியும்.
No comments:
Post a Comment