‘ராவணன்’ படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு வந்த சமந்தாவை நிராகரித்த மணிரத்னம் தெலுங்கில் அவர் பிரபலமானதால் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
விக்ரம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் நடித்த ‘ராணவன்’ படத்தை மணிரத்னம் இயக்கினார். அடுத்து ‘பூக்கடை’ என்ற படத்தை இயக்குகிறார்.
‘அலைகள் ஓய்வதில்லை’ ஜோடிகளான கார்த்திக் - ராதாவின் வாரிசுகளை இதில் நடிக்க வைக்க மணிரத்னம் விரும்பினார். கார்த்திக் மகன் கவுதம் ஹீரோ என முடிவானது.
ஆனால், ராதா மகள் துளசி ஓகே ஆகவில்லை. இதற்கிடையில் கமல்ஹாசனின் 2-வது மகள் அக்ஷரா, பார்த்திபன் மகள் கீர்த்தனா, பாலிவுட் நடிகை சோனம் கபூர் ஆகியோரில் ஒருவரை ஹீரோயினாக நடிக்க வைப்பதுபற்றி ஆலோசித்து வந்தார். இந்நிலையில் நடிகை சமந்தாவை ஹீரோயினாக தேர்வு செய்திருக்கிறார் மணிரத்னம்.
சமந்தா நடிக்க வந்த புதிதில் ‘ராவணன்’ படத்தை இயக்கிக்கொண்டிருந்தார் மணிரத்னம். அதில் சமந்தா வாய்ப்பு கேட்டார். இதற்காக போட்டோஷூட் நடத்திய பிறகு, சமந்தாவை மணிரத்னம் நிராகரித்தார்.
அதன் பிறகு, தெலுங்கு படத்தில் நடித்தார் சமந்தா. ‘தூக்குடு’ என்ற படம் சூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து சமந்தாவுக்கு மவுசு அதிகரித்தது.
இதையடுத்து ‘பூக்கடை’ படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் மணிரத்னம். ‘நிராகரித்தவரே மீண்டும் அழைப்பு தந்திருக்கிறார். சினிமாவில் முன்னேற அதிர்ஷ்டம் முக்கியம். சமந்தாவுக்கு அதிர்ஷ்டம் சூப்பராக அடிக்கிறது’ என்கிறது கோலிவுட் வட்டாரம்.
No comments:
Post a Comment