Tamil News

Tuesday, January 10, 2012

இந்தியா வந்தார் டாம் க்ரூஸ் !


இந்திய திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகும் போது அப்படத்தில் நடித்தவர்கள் முக்கியமான இடங்களுக்கு சென்று தங்களது படத்தினை விளம்பரப்படுத்துவார்கள்.

ஆங்கில படங்கள் வெளியாகும் போது அதில் நடித்த நாயகர்களும் படத்தினை இவ்வாறே விளம்பரப்படுத்தினாலும் யாரும் படம் வெளியாகும் முன்பு இந்தியாவிற்கு வந்து தங்களது படத்தினை விளம்பரப்படுத்தியது இல்லை.

முதன் முறையாக TOM CRUISE இன்று அதிகாலை 6 மணியளவில் இந்தியா வந்துள்ளார். தனது நடிப்பில் வெளிவர இருக்கும் ' MISSION IMPOSSIBLE 4 ' படத்தினை விளம்பரப்படுத்த இந்தியா வந்துள்ளார்.

டிசம்பர் 21ம் தேதி வெளிவர இருக்கும் இப்படத்தை மும்பையில் 1500 ரசிகர்களுடன்  கண்டு களிக்க இருக்கிறார். இந்தியாவின் காஸ்ட்லி ஹோட்டலான HOTEL EXQUISITE-ல் தங்கி இருக்கிறார்.

' MISSION IMPOSSIBLE 4 ' படத்தில் இந்தி நடிகர் அனில் கபூரும் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment