இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெருக்கமான நண்பர் பரத்பாலா. ஏ.ஆர்.ரஹ்மானின் வீடியோ ஆல்பங்கள் அனைத்தையும் இயக்கியவர் பரத்பாலா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பரத்பாலா ஏற்கனவே HARI OM என்னும் படத்தினை இயக்கி இருக்கிறார்.இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்றுள்ளது.
இந்நிலையில் முதன் முறையாக பரத்பாலா ஒரு தமிழ் படத்தினை இயக்க இருக்கிறார். இப்படத்தின் மூலம் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் கால் பதிக்கிறது.
நண்பனின் படத்திற்கு இசையமைக்க ஓகே சொல்லி இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். தனுஷ் நாயகனாக நடிக்க இருக்கிறார்.
எப்போதுமே வீடியோ ஆல்பமாக இருந்தாலும் சரி, படமாக இருந்தாலும் சரி ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தும் பரத்பாலா, இம்முறை ஒரு அழகான கிராமத்து கதையை இயக்க இருக்கிறார்.
இப்படத்திற்கு ராஜுவ்மேனன் ஒளிப்பதிவு செய்யலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
No comments:
Post a Comment