எங்கேயும் எப்போவும் படத்துல நடிச்ச சரவமான ஆனந்த நடிகருக்கு பெரிய சான்ஸ் எதுவும் வரலை யாம்... வரலையாம்...
இதனால சொந்த பிசி னஸ்ல கவனம் செலுத்துறாராம். ‘நடிச்சுதான் பணம் சம்பாதிக்கணும்னு ந¤னைக்கல. வயசாகிட்டே போறதால பணம் சம்பாதிச்சாக வேண்டிய கட்டாயம் இருக்கு. அதனாலதான் பிசினஸ்ல அதிக கவனம் செலுத்தறேன்Õனு நடிகரு விளக்கம் தர்றாராம்...
தர்றாராம்...
பிரகாச ஹீரோவுக்கு தன்னோட படத்துக்கு தெலுங்கு டப்பிங் ரைட்ஸ் வாங்குற ஆசை வாட்டி வதைக்குதாம்.. வதைக்குதாம்... ஏற்கனவே பிரெண்ட் படத்துல நடிக்க ரைட்ஸ் கேட்டு, சான்ஸை மிஸ் பண்ணினாரு. அதே மாதிரி திரும்பவும் நடந்திருக்காம்... நடந்திருக்காம்... இசையோட மகன் இயக்குறதா இருந்த படத்துக்கும் ரைட்ஸ் கேட்டாராம்... நடிகரு கேட்டாராம்... அதனால அந்த படமும் கையை விட்டு போயிருச்சாம்... போயிருச்சாம்...
சின்னதம்பி நடிகரோட வாரிசு டைரக்ஷன்ல குதிக்கிற விருப்பத்துலதான் இருந்தாரு. இதுக்காக டைரக்ஷனும் கத்துக்கிட்டாரு. ஆனா சுலபமா கல்லா நிரப்புறதுக்கு வழி, நடிப்புதான்னு நெருங்கியவங்க அட்வைஸ் பண்ணினதால, இப்போ நடிகரு ஆயிட்டாரு. இனி டைரக்ஷன் பற்றி யோசிக்க கூட வாரிசு விரும்பலையாம¢... விரும்பலையாம்...
No comments:
Post a Comment