Tamil News

Sunday, January 8, 2012

முகமூடி திரைமுன்னோட்டம்..



யு.டி.வி., சார்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் முகமூடி. 

ஜீவா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே அறிமுகமாகிறார். முதன்முறையாக நடிகர் நரேன் வில்லன் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். ஹாலிவுட்டில் உருவான பேட்மேன், ஸ்பைடர்மேன், சூப்பர் மேன் போன்ற ஆங்கிலப் படங்களைப் போல ஒரு சாகஸ நாயகனின் படமாக முகமூடி படம் உருவாகிறது. குங்பூ கலையை மையமாக வைத்தும் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ஜீவா, நரேன் மற்றும் படத்தில் பங்குபெறும் மற்ற கலைஞர்களும் சேகர், என்ற குங்பூ பயிற்சியாளரிடம் கடந்த ஆறு மாதங்களாக பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் மிஷ்கின். கே இசையமைக்க, சத்யா ஒளிப்பதிவு செய்கிறார். டைரக்டர் மிஷ்கினின் கனவுப்படம் என்று கூறப்படும் இந்த படம் மிக பிரம்மாண்டமாக தயாராகிறது. சமீபத்தில் துவங்கிய இப்படத்தின் முதற்கட்ட சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

No comments:

Post a Comment