இந்திய அளவில் சிறந்த நடிகை, சிறந்த பாடலாசிரியர் உட்பட மூன்று தேசிய விருதுகளை வென்ற 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தை இயக்கிவர் சீனு.ராமசாமி. அடுத்து இவருக்கு வாய்ப்புக்கள் குவிந்தாலும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலினை தனது தயாரிப்பாளராக தேர்ந்தெடுத்தார். 'நீர்ப்பறவை' என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒரு கடலோர கிராமத்தின் கதையை இயக்குகிறார். தூத்துக்குடி மற்றும் அதன் கடலோர கிராமங்களில் இம்மாதம் 20-ம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்குகிறது சீனு.ராமசாமியின் டீம்! இப்படத்தில் 'வெண்ணிலா கபடிக்குழு', 'குள்ளநரிக்கூட்டம்', 'பலே பாண்டியா' ஆகிய படங்களில் நடித்த விஷ்ணு நாயகனாக நடிக்கிறார். 'பொக்கிஷம்', 'வெப்பம்', 'கழுகு' ஆகிய படங்களில் நடித்த பிந்து மாதவி நாயகியாக நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, 'பூ' ராம், பிளாக் பாண்டி, அருள்தாஸ், ரோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து எம்.செண்பகமூர்த்தி. ஆர்.அர்ஜுன் துரை ஆகியோர் படத்தை தயாரிக்கிறார்களாம். இவர் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. சீனு ராமசாமி, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். ஆனால் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். ஒளிப்பதிவு பாலாவுக்குப் பிடித்தமான பாலசுப்ரமணியம். தற்போது ஆண்டனியை பின்னுக்கு தள்ளிவிட்டு எடிட்டிங்கில் முந்திவரும் மு.காசி விஸ்வநாதன்தான் படத்துக்கு எடிட்டிங். கலை இயக்குநர்- செல்வகுமார். சீனு ராமசாமி தனது 'தென்மேற்குப் பருவக்காற்றில்' அறிமுகப்படுத்திய அதே என்.ஆர்.ரகுநந்தன் இந்தப்படத்துக்கும் இசை. 'தென்மேற்கு பருவக்காற்றில்' தேசிய விருது பெற்றதைத் தொடர்ந்து அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். முதலில் இரண்டு பாடல்களை படம்பிடித்துவிட்டு அதன்பிறகு உரையாடல் காட்சிகளை படம் பிடிக்க இருக்கிறார்கள். ஓ... பேஷா ஆரம்பிங்க... அடுத்த விருத வாங்கணும்ல.....!
No comments:
Post a Comment