Tamil News

Sunday, January 15, 2012

சொன்னபடி கதையை எடுப்பதில்லை : பிரியாமணி தாக்கு ..


‘சொன்னபடி கதைகளை எடுக்காததால் பல படங்கள் தோல்வி அடைகின்றன’ என்றார் பிரியாமணி. இதுபற்றி அவர்
 கூறியதாவது: கன்னடத்தில் நடித்த விஷ்ணுவர்தனா பட வெற்றி விழாவில் என்னால் பங்கேற்க முடியவில்லை. தெலுங்கில் ‘ஷேத்ரம்’ படம் வெளியானது.


 இப்படத்தில் நான் நடித்தது பற்றி விமர்சிக்கிறார்கள். ஆனால் எனக்கு வரும் எஸ்எம்எஸ், போன்களில் என் நடிப்பு பிடித்திருப்பதாக ரசிகர்கள் சொல்கின்றனர். படத்தின் தோல்விக்கு சில காரணங்கள் இருக்கின்றன. பல இயக்குனர்கள் ஸ்கிரிப்ட் சொல்லும்போது நன்றாக இருக்கிறது.


ஆனால் ஷூட்டிங்கின்போது பல காட்சிகளை மாற்றி விடுகிறார்கள். இதனால் எதிர்பார்த்தபடி படங்கள் வருவதில்லை. தோல்வி அடைகிறது. ஷூட்டிங் நடக்கும்போது முதலில் சொன்னபடி காட்சி இல்லையே என்று கேட்டால் அப்போதைக்கு அதை சரிசெய்கிறார்கள். நடித்துவிட்டு போகிறேன்.


ஆனால் எடிட்டிங் செய்யும்போது எப்படி மாறும் என்பதெல்லாம் என் கட்டுப்பாட்டில் கிடையாது. இப்போது கன்னட படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டில் நிறைய நல்ல படங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

No comments:

Post a Comment