காற்றுக்கும் ஹேர் டிரஸ்சருக்கும் நடக்கும் போராட்டத்தை கவனித்தால், ஐயோ பாவம்டா இந்த பொழப்பு என்றே தோன்றும். லேசாக முடி கலைந்தால் கூட ஓடி வந்து தலை சீவிவிடும் ‘பேட்டா’ அம்மாக்கள்தான் இவர்கள். அதுவும் காற்று வந்து கலைத்துக் கொண்டேயிருக்கும் மெரீனா பீச்சில் ஷுட்டிங் வைத்தால் என்னாகும்?
மெரீனா படப்பிடிப்பில் ஓவியாவின் மேக்கப்பே ‘தனி தெலுங்கானா’ ரேஞ்சுக்கு பிரச்சனையை கிளப்பிவிட்டதாம். அந்த வயிற்றெரிச்சலை நம்மோடு பகிர்ந்து கொண்டார் படத்தின் டைரக்டர் பாண்டிராஜ்.
என் படத்தின் ஹீரோயின்கள் மேக்கப் போட்டால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. சுனைனாவும் அப்படிதான் மேக்கப் இல்லாமல் நடித்தார். பசங்க-வில் வேகாவும் அப்படிதான். அதே மாதிரி இந்த படத்திற்கும் மேக்கப் தேவையில்லைன்னு ஓவியாவிடம் சொல்லிட்டேன். முதல் ரெண்டு நாள் ஷுட்டிங் போச்சு.
கடல் காற்று. அடிக்கிற வெயில். ரெண்டையும் பொறுத்துக் கொள்ள முடியாத ஓவியா மூணாவது நாளே மேக்கப்போடு வர ஆரம்பிச்சுட்டாங்க. நானும் போகட்டும்னு விட்டுட்டேன் என்றவர், அந்த பிரஸ்மீட்டை ஒரு நன்றி அறிவிப்பு கூட்டமாகவே நடத்தி முடித்துவிட்டார்.
இந்த படத்தின் பிரமோஷனுக்காக ஒரு பாடல் எடுக்கணும்னு ஆசைப்பட்டேன். சசிகுமார், அமீர் சார் ரெண்டு பேரும் நான் கூப்பிட்டவுடனே வந்து நடிச்சு கொடுத்தாங்க.
எனக்கு பெரிய அளவுக்கு பழக்கம் இல்லாத சினேகா, விக்ரம் ரெண்டு பேரும் வந்ததுதான் இன்னும் பெரிய சந்தோஷத்தை கொடுத்துச்சு. அதிலும் ராஜபாட்டை ரிலீஸ் டென்ஷனில் இருந்த விக்ரம், அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடிச்சு கொடுத்தார் என்றார் மிக்க எமோஷனலோடு.
அவ்வளவு சந்தோஷத்திலும் ஒரு வருத்தம் பாண்டிராஜுக்கு. மெரீனா படத்தின் தயாரிப்பாளரே சசிகுமார்தான்னு வெளியில் பேசிக்கிறாங்க. உண்மை அதுவல்ல என்றார்.
தன்னம்பிக்கை சூப்பை தாய் பாலா நினைச்சு குடிக்கிற இயக்குனர்களில் முதன்மையானவர் டி.ராஜேந்தர் என்றால், பாண்டிராஜ் அவருக்கு கொஞ்சமும் சளைத்தவரல்ல. உழைப்பால் முன்னுக்கு வந்த இவரை இன்னொருவரின் பினாமி என்றால் வருத்தாமல் வேறென்ன செய்வாராம்?http://www.therealfun.com/Innocent-Hot-Girl-Face-HD-14709/
No comments:
Post a Comment