
'ஒய் திஸ் கொலவெறி ' பாடல் மூலமாக தான் 3 படத்திற்கு ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அப்பாடல் இதுவரை எந்த ஒரு இந்திய பாடலும் செய்யாத சாதனை செய்து இருக்கிறது.
' 3 ' படக்குழுவினர் 'கொலவெறி' பாடலுக்கு கிடைத்த எதிர்ப்பார்ப்பால் இப்பாடலை எப்படி காட்சிப்படுத்துவது என்பதை ஆலோசித்து வந்தார்கள். இந்நிலையில் இப்பாடலை காட்சிப்படுத்துவதற்கு படத்தின் ஸ்பான்ஸர்கள் '3 ' படத்தின் தயாரிப்பு தரப்புக்கு 2 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள்.
இப்பாடலை சென்னையில் இருக்கும் VGP Resort-ல் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். காட்சிப்படுத்தியதில் கொலவெறியும் 2 கோடி ரூபாய் செலவும் திரையில் தெரிந்தால் சரி!
No comments:
Post a Comment