Tamil News

Tuesday, January 10, 2012

அமீர்கான் டெல்லி பெல்லி - முன்னணி வதந்தி !


அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த முழு நீள காமெடி படம் 'டெல்லி பெல்லி'. இப்படம் இந்தி திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

'டெல்லி பெல்லி' படத்தினை விநியோகம் செய்ததால் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையும் யு.டிவி நிறுவனத்திடம் தான் இருக்கிறது. ஆகவே தமிழில் அப்படத்தினை யு.டிவி தயாரிக்க இருக்கிறார்கள்.

'டெல்லி பெல்லி' படம் குறித்து பல்வேறு தகவல்கள் கோடம்பாக்கத்தில் உலா வந்தன. அனைத்து தகவல்களையும் யு.டிவி நிறுவனம் மறுத்துள்ளது.

இதுகுறித்து யு.டிவி நிறுவனத்தின் தென்னந்திய தலைவர் தனஞ்செயன் " 20 பிலிம்ஃபேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட டெல்லி பெல்லி படத்தின் தமிழ் ரீமேக்கை  தயாரிக்க இருக்கிறோம்.

ஆனால் இதுவரை நாங்கள் எந்த ஒரு நடிகருடன் இதுகுறித்து பேசவில்லை. டெல்லி பெல்லி தமிழ் பதிப்பில்  முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பது குறித்து  வலம் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.  நாங்கள் இதுவரை அவர்களை தொடர்பு கொள்ளவில்லை " என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment