Tamil News

Tuesday, January 10, 2012

கமல் + கிரேஸி மோகன் = காமெடி !


கமல் - கிரேஸி மோகன் கூட்டணியில் உருவான படம் என்றால் சிரிப்புக்கு பஞ்சமிருக்காது என்பது ரசிகர்கள் கருத்து.  'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் இருந்து 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படம் வரை இந்த கூட்டணி நகைச்சுவையால் மக்களை மயக்கியிருக்கிறது.

எப்போதுமே ஒரு படத்திற்கு நீண்ட காலம் எடுத்து கொண்டால், அடுத்த படம் குறுகிய கால படமாக வெளியிடுவது கமலின் இயல்பு. 'உன்னைப்போல் ஒருவன்' படத்தினை தொடர்ந்து 'விஸ்வரூபம்' படம் தொடங்க நீண்ட காலம் ஆனது.  காலதாமதத்தை ஈடு செய்ய, தற்போது வெளிநாடுகளில் 'விஸ்வரூபம்' படு வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் 'விஸ்வரூபம்' படத்தினைத் தொடர்ந்து மீண்டும் கமல் - கிரேஸி மோகன் கூட்டணி மீண்டும் கைகோர்க்கிறார்கள். குறுகிய கால தயாரிப்பாக  இப்படம் அமைய வேண்டும் என கமல் தீர்மானித்திருக்கிறாராம்.

கமல் 'விஸ்வரூபம்' படத்திற்காக வெளிநாட்டில் இருந்தாலும் அவ்வப்போது கிரேஸி மோகனை தொடர்பு கொண்டு படத்தின் வேலைகள் குறித்து விசாரித்து வருகிறாராம்.

இப்படத்தினை சிவாஜி புரோடக்ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. 'நண்பர்களும் 40 திருடர்களும்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்களாம். 'விஸ்வரூபம்' படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் போதே இப்படத்திற்கான படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

No comments:

Post a Comment