பெரும்பாலான தியேட்டர்களில் பெரிய நடிகர்களின் படங்கள் ஆக்கிரமிப்பதால், சிறு பட்ஜெட் படங்கள் முடங்கி வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு, இனி பண்டிகை நாட்களில் மட்டுமே பெரிய நடிகர்கரின் படங்களை ரிலீஸ் செய்வதென்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து இயக்குநரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தியேட்டர்களை பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்கள் ஆக்கிரமித்து கொள்கிறது. இதனால் சின்ன பட்ஜெட் படங்கள் பல முடங்கி போய் உள்ளன. கடந்த ஆண்டு தணிக்கை செய்யப்பட்டு கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கி போய் உள்ளன. இதனால் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம். இந்த நிலைமையை சரிசெய்யும் பொருட்டு, பெரிய நடிகர்களின் படங்களை ஏப்ரல் 14, மே 1, ஆகஸ்ட் 15, தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய 5 தினங்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். இதன் மூலம் சின்ன பட்ஜெட் படங்களுக்கும் போதிய தியேட்டர் கிடைக்கும் என்று கூறியுள்ளார். |
Tuesday, January 10, 2012
ரிலீஸ் ஆகாமல் 200 படங்கள் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment