அடுத்த மாதம் கோச்சடையான் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினி நடிக்க கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாக இருந்த ராணா படம் தள்ளி வைக்கப்பட்டது.
இதற்கிடையில், சவுந்தர்யா இயக்கும் கோச்சடையான் படத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்தின் இயக்கம் மேற்பார்வை பொறுப்பை ரவிகுமார் ஏற்றிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.
3 டி அனிமேஷன் படமாக இது உருவாகிறது. இப்படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்து வருகிறது. கடந்த புத்தாண்டு தினத்தன்று பேட்டி அளித்த ஏ.ஆர்.ரகுமான், ரஜினியின் கோச்சடையான் படத்தின் இசை பணியை விரைவில் தொடங்க உள்ளேன் என்றார்.
விரைவில் ஷூட்டிங் தொடங்க திட்டமிட்டுள்ளதால் அதற்கான பணிகளை சவுந்தர்யா கவனித்து வருகிறார். இதுபற்றி ரஜினியிடம் கேட்ட போது, என் உடல்நலம் நன்றாக உள்ளது.
அடுத்த மாதம் முதல் கோச்சடையான் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறேன் என்றார். ஷூட்டிங்கில் கலந்து கொள்வது பற்றி ரஜினியே பேட்டி அளித்திருப்பதால், அதற்கான பணியில் பட குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment