Tamil News

Sunday, January 8, 2012

ஆங்கிலத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் மனிஷா கொய்ராலா!


மலையாளம், ஆங்கிலத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் மனிஷா கொய்ராலா.நேபாளத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் மனிஷா கொய்ராலா.

இந்நிலையில் தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் மாமியார் வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றார். தற்போது மலையாள படவுலகில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றிருக்கிறார்.

மலையாள பட இயக்குனர் லெனின் ரங்கராஜன் எடவாபதி என்ற படத்தை இயக்குகிறார். இதில் முக்கிய வேடத்தில் நடிக்க மனிஷா கொய்ராலாவை தெரிவு செய்திருக்கிறார்கள்.

இந்தியர் ஒருவருக்கும் திபெத்தியர் ஒருவருக்கும் இடையே உள்ள உறவை பற்றிய கதை. யதார்த்தத்தை விரும்பும் ரசிகர்களுக்கான கதைகளையே லெனின் இயக்குவது வழக்கம்.

இம்முறையும் அதைத்தான் செய்கிறார். சந்தோஷ் சிவன் இயக்கிய யாதா என்ற படத்தில் நடித்த சித்தார்த்தா, முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மற்றொரு வேடத்தில் ஜெகபதிபாபு நடிக்கிறார். மது அம் பாட் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் ஆங்கிலத் தில் நோ மேன்ஸ் ஐலேண்ட் என்ற பெயரில் உருவாகிறது.

No comments:

Post a Comment