பந்தயத்தில் தோற்பதற்காக உழவுக்கு பயன்படுத்தும் மாட்டை ரேஸில் ஓட வைத்தார் இயக்குனர். இதுபற்றி ‘பூவம்பட்டி’ பட இயக்குனர் புதுகை மாரிசா கூறியதாவது: கிராமத்து காதல் கதையாக உருவாகிறது.
கிளைமாக்ஸ் வரை ஹீரோ சந்தீப், ஹீரோயின் லாவண்யா ஒருவரையொருவர் காதலித்தாலும் பேசிக்கொள்ளவே மாட்டார்கள்.
கிளைமாக்ஸில் பேசும்போது எதிர்பாராதது நடக்கிறது. மற்றொரு ஹீரோயின் ஸ்ரீஷாலினிக்கு சுட்டிப்பெண் வேடம்.இதில் ஹீரோ ரேக்ளா ரேஸில் பங்கேற்கும் காட்சி உள்ளது. போட்டியில் தோற்றுவிட்டு ஜெயித்ததுபோல் வெற்றிகோப்பை வாங்கிவந்து ஊரை ஏமாற்றுவார். இதற்காக புதுக்கோட்டை அரிமழம் கிராமத்தில் 5 ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட்டது. ஹீரோ தோற்பதுபோல் படமாக்க ஏரில் பூட்டி உழவுக்கு பயன்படுத்தும் மாடுகளை ரேஸில் பங்கேற்க வைத்தோம். மற்ற மாடுகளை காட்டிலும் மெதுவாக ஓடி தோற்கும்.
இதுபோல் 4 பந்தயங்கள் வெவ்வேறு கோணங்களில் படமாக்கப்பட்டது. 5வது முறையாக படமாக்கும்போது மற்ற மாடுகள் அருகருகே வேகமாக ஓடுவதை பார்த்து மிரண்டு இவையும் வேகமாக ஓடத் தொடங்கிவிட்டன. 4 கி.மீ. தூரம் துரத்தி சென்று மாட்டை பிடித்து வந்தோம். கிடார் ஆனந்த் இசை. ஹரிஷ் ஒளிப்பதிவு. எஸ்.எ .கே.சின்ராசு தயாரிப்பு.
No comments:
Post a Comment