தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் லிப் டு லிப் காட்சியில் நடித்துள்ளார் காஜல் அகர்வால். 'நான் மகான் அல்ல', 'மாவீரன்' போன்ற படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தற்போது 'மாற்றான்' படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மகேஷ் பாபுவுடன் 'பிஸினஸ்மேன்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் மகேஷ் பாபு, காஜல் 'லிப் டு லிப்' முத்தமிடும் காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. இதில் நடிக்க மறுத்து வந்தார் மகேஷ் பாபு. கதைக்கு முக்கிய தேவை என்பதால் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் புரி ஜெகநாத் கூறி வந்தார். இதுபற்றி மகேஷ் பாபு தனது மனைவி நம்ரதாவிடம் ஆலோசித்தார். முத்தக்காட்சியில் நடிக்க அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து சமீபத்தில் இக்காட்சியில் மகேஷ் பாபு நடித்தார். இதுபற்றி இயக்குநர் புரி ஜெகநாத் கூறும்போது, "இப்படத்தில் மகேஷ் பாபு, காஜல் அகர்வால் லிப் டு லிப் காட்சி இருக்கிறது. படம் ரிலீஸானதும் அது காட்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். மேலும் இப்படத்தை சமீபத்தில் மகேஷ் பாபு மனைவி நம்ரதாவுக்கு திரையிட்டு காட்டினேன். அவர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. மாறாக நன்கு ரசித்துப் பார்த்தார்" என்றார். அடடா! என்ன ஒரு ரசனையான மனைவி... குடுத்துவச்சவரு போங்க.....
No comments:
Post a Comment