காதல் கிசுகிசு பரப்பியதால் ஜெய்யுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று கூறிய அஞ்சலி தமிழ், தெலுங்கு இருமொழி படங்களில்
அவர் ஜோடியாக நடிக்கிறார். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் ஜெய், அஞ்சலி காதல் ஜோடியாக நடித்தனர். இப்படத்துக்கு பிறகு இருவரும் காதலர்கள் ஆகிவிட்டதாக கிசுகிசு பரவியது. இதையறிந்து அஞ்சலி அதிர்ச்சி அடைந்தார். காதல் கிசுகிசு ஜெய் தரப்பில் இருந்துதான் கிளப்பி விடப்படுகிறது. நான் யாரையும் காதலிக்கவில்லை. வீண் வதந்தி பரப்பிய ஜெய்யுடன் இனி சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று அஞ்சலி கூறினார். ஜெய்யும் பதிலடி கொடுக்கும் வகையில் ‘நடிகையை திருமணம் செய்ய மாட்டேன். வீட்டில் பார்க்கும் பெண்ணைத்தான் மணப்பேன்’ என்று கூறி இருந்தார்.
இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஜெய், அஞ்சலி ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. தங்களது மோதலை மறந்து இருவரும் ஜோடி சேர முடிவு செய்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு இருமொழிகளில் உருவாக உள்ளது. இதுபற்றி ஜெய் கூறும்போது, ‘‘நான் ஒரு நடிகன். யாரையும் எதிரியாக பார்ப்பதில்லை. எனக்கு கதைதான் முக்கியம். யார் ஹீரோயினாக இருந்தாலும் ஜோடி சேர்ந்து நடிப்பேன்’’ என்றார். இதுபற்றி இயக்குனர் ஒருவர் கூறும்போது, ‘‘அரசியல்போல் சினிமாவிலும் நிரந்தர நண்பனும் கிடையாது. நிரந்தர எதிரியும் கிடையாது’’ என்றார்.
No comments:
Post a Comment