Tamil News

Tuesday, January 10, 2012

இந்தி போராளி !


சசிக்குமார், நரேஷ், கஞ்சா கருப்பு, சுவாதி, நிவேதிதா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'போராளி'. சசிக்குமார் தயாரிக்க, சமுத்திரக்கனி இயக்கி இருந்தார்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார் நடித்த 'நாடோடிகள்' படத்தினை இந்தியில் ப்ரியதர்ஷன் இயக்க இருக்கிறார். இந்நிலையில், ' போராளி ' படத்தினை பார்த்த ப்ரியதர்ஷன் அப்படத்தினை பாராட்டினாராம்.

இப்போது 'போராளி' படத்தையும் இந்தியில் ரீமேக் செய்யலாம் தீர்மானித்தார்களாம். இப்படத்தினை இந்தியில் சமுத்திரக்கனி இயக்குகிறார்.

'போராளி' படத்தை இந்தி திரையுலகிற்கு ஏற்ப திரைக்கதையை மாற்றி அமைப்பதில் ப்ரியதர்ஷன் உதவ இருக்கிறாராம். அது மட்டுமில்லாது, படத்துக்கு தயாரிப்பாளரையும், இந்தி நடிகர்களையும் ஒப்பந்தம் செய்து தரவும் முன்வந்திருக்கிறாராம் ப்ரியதர்ஷன்.

No comments:

Post a Comment