Tamil News

Tuesday, January 10, 2012

மீண்டும் அஞ்சலி ஜெய்..?


ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பாளராக அறிமுகமான படம் 'எங்கேயும் எப்போதும்'. சரவணன் இயக்க ஜெய், அஞ்சலி, சர்வானந்த் அனன்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

'எங்கேயும் எப்போதும்'  படத்தில் இடம்பெற்ற ஜெய் - அஞ்சலி காதல் காட்சிகள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

ஜெய் - அஞ்சலி இருவருமே காதலிக்கிறார்கள் என்று கோடம்பாக்கத்தில் செய்திகள் உலாவர ஆரம்பித்தன. உடனே அஞ்சலி " அந்த நடிகருக்கும் எனக்கும் காதல் இல்லை. இனிமேல் அவருடன் இணைந்து படங்களில் நடிக்க மாட்டேன் " என்று தெரிவித்தார்.

ஜெய் " நான் காதலித்து திருமணம் செய்துகொள்ள மாட்டேன். அதுவும் ஒரு நடிகையை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள மாட்டேன் " என்று அறிக்கை விட்டார்.

ஆனால் இருவரையும் கோடம்பாக்கத்தினர் விடுவதாக இல்லை. ராம் கோபால் வர்மாவிடம் உதவி இயக்குனராக இருந்த மஞ்சுநாத் என்பவர் புதுப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.

'எங்கேயும் எப்போதும்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'JOURNEY' படத்தினை பார்த்தவர்  தனது படத்திலும் ஜெய் - அஞ்சலி ஜோடி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறாராம்.

இருவரையும் சந்தித்து கதையை சொல்லி கண்டிப்பாக சம்மதிக்க வைப்பேன் என்ற உறுதியுடன் இருக்கிறாராம் இயக்குனர்.

சம்மதிப்பார்களா ?

No comments:

Post a Comment