ரஜினி நடித்த 'பாபா' படத்திற்குப் பிறகு பூஜை போடப்பட்ட படம் 'ஜக்குபாய்'. அப்படம் தொடங்கப்படாமல் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவாஜி புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் பி.வாசு இயக்கிய 'சந்திரமுகி' படம் திரைப்படம் வெளிவந்து வரவேற்பை பெற்றது.
'ஜக்குபாய்' கூட்டணி ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் மீண்டும் இணைய பூஜை போடப்பட்ட படம் 'ராணா'. ரஜினியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்படம் தொடங்கப்படாமல் இருந்தது.
தற்போது 'கோச்சடையான்' படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த இப்படத்தினை இயக்க இருக்கிறார்.
இந்நிலையில், சிவாஜி புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் மீண்டும் ரஜினி - பி.வாசு இணைய இருக்கிறார்கள் என்று வதந்தி கோடம்பாக்கத்தில் தானே நிலை கொண்டது.
இதுகுறித்து வாசு " நானும் ரஜினி சாரும் இணையும் படம் குறித்து வந்த செய்தியில் உண்மையில்லை. நாங்கள் இருவரும் படம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எப்படிதான் இந்த மாதிரி வதந்திகள் பரவுகிறது என்று தெரியவில்லை. தற்போது கன்னட படமான 'ரக்ஷகா' என்னும் படத்தினை இயக்கி வருகிறேன் " என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment