தமிழ் திரையுலகில் பொதுவாக இரு நடிகைகள் நண்பர்களாக இருப்பது அரிதாகி விட்டது.
சமீபத்தில் வெளியான அமலா பால் புகைப்படங்களைப் பார்த்த நயன்தாரா, "உங்கள் தோற்றம் அசத்தலாக உள்ளது. அப்படியே பிரியங்கா சோப்ராவை பார்ப்பது போலவே இருக்கிறது " என்று எஸ்எம்எஸ் அனுப்பி இருக்கிறார்.
இதில் மகிழ்ச்சியின் உச்சிக்கு போன அமலாபால், "நயன்தாராவை நினைத்தால் எனக்குப் பெருமையாக உள்ளது. எங்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நயன்தாரா. ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இந்த தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர். அவர் என்னைப் பாராட்டிதை பல விருதுகளைப் பெற்றதற்கு சமமான உணர்கிறேன். அவர்தான் இனி எனக்கு முன்னோடி," என்று கூறி இருக்கிறார்.
No comments:
Post a Comment