Tamil News

Tuesday, January 10, 2012

அமெரிக்காவுக்கே படம் காட்டுவோம் !


இந்தி திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் யாஷ் ராஜ் பிலிம்ஸ். முதன் முறையாக YRF Entertainment என்ற பெயரில் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி இருக்கிறார்கள்.

ஆங்கிலப் படங்களைத் தயாரித்து, அமெரிக்க மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஆங்கில பட ரசிகர்களை கவரவே இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதாம்.

யாஷ் சோப்ராவின் மகன் உதய் சோப்ரா YRF Entertainment நிறுவனத்தின் முக்கிய அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இது குறித்து உதய் சோப்ரா கூறியிருப்பது " எனது குடும்பத்தினர் நல்ல படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வருகின்றனர். எனக்கு சின்ன வயதில் இருந்தே அமெரிக்க படங்கள் மிகவும் பிடிக்கும். எனது ஆர்வத்தின் காரணமாகத் தான் இந்த நிறுவனத்தை துவக்கியுள்ளோம் " என்று தெரிவித்துள்ளார்.

YRF Entertainment தங்களது முதல் தயாரிப்பாக THE LONGEST WEEK என்ற காமெடி படத்தினை தயாரித்து வருகிறார்கள்.

Jason Bateman, Olivia Wilde, Billy Crudup உள்ளிட்டோர் நடிக்க,  படப்பிடிப்பு நியூயார்க்கில் துவங்கிவிட்டது. Peter Glanz  என்பவர் இயக்கி வருகிறார்.

No comments:

Post a Comment