தமிழக தேர்தலுக்குப் பிறகு, வடிவேலு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை. ஆட்சி மாற்றத்தால் வடிவேலுவை படத்தில் ஒப்பந்தம் செய்வதை பலர் தவிர்த்தனர்.
தேர்தலுக்கு முன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பிரசாந்துடன் வடிவேலு நடித்த 'மம்பட்டியான்' படம் வெளியானது. அப்படமும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
இந்நிலையில், சிம்புதேவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சிம்புதேவனின் முதல் படமான 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' மூலம் வடிவேலு சிம்புதேவன் கூட்டணி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது தான் இயக்கப் போகும் படத்தில் தனுஷுடன் வடிவேலு நடித்தால் பொருத்தமாக இருக்கும் என இயக்குனர் நினைத்தாராம்.
"இந்த படத்துல ஒப்பந்தமானால் வடிவேலு இன்னும் ஒரு ரவுண்டு வருவார் பாருங்க..!" என்கிறார்கள் வடிவேலு விசுவாசிகள் !
No comments:
Post a Comment