Tamil News

Friday, January 13, 2012

கௌதமுடன் ஜோடி சேரும் சமந்தா?


ராவணன் படத்திற்குப் பிறகு மணிரத்னம், கார்த்திக்கின் மகன் கௌதமை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. கதாநாயகன் கௌதம் என்பதில் மாற்றம் இல்லையே தவிர, கதாநாயகிக்கு சரியான நடிகையை தேடும் படலம் தொடர்ந்து நடந்து வந்தது.

முதலில் ராதாவின் இரண்டாவது மகள் துளசி நாயகியாக நடிப்பார் என தகவல்கள் பரவின. பின்னர், கார்த்திக் மகனுக்கு ஜோடியாக கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா நடிப்பார் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அக்ஷரா தன் கவனம் இயக்குனராவதில் தான் இருக்கிறது என்றார். எனவே அவரும் இல்லை என்றானது.

மணிரத்னம் இயக்கத்தில் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் நடித்த கீர்த்தனா இப்படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும் பேச்சு எழுந்தது. ஆனால் இவர்கள் யாருமே அப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படவில்லை.

இப்போது சமந்தா இப்படத்தின் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க 45 நாட்கள் ஒதுக்கியிருக்கிறாராம்.

சமந்தா இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் மூன்று மொழிகளில் தயாரிக்கப்படும்  'நீதானே என் பொன்வசந்தம்' நடித்து வருகிறார். மூன்று மொழிகளிலும் சமந்தாவே நாயகியாக நடிக்கிறார்.

கௌதம் மேனன் படம் முடிந்த பிறகு கௌதம் உடன் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

பெரிய இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து கமிட் ஆவதால், சமந்தா மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

No comments:

Post a Comment