வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜின் மார்க்கெட் எப்போது எகிறியதோ, அப்போதில் இருந்தே தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ஏகப்பட்ட டார்ச்சர் கொடுத்து வருகிறார். சொன்னபடி ஸ்பாட்டுக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் டேக் ரெடி என்றதும் கேமரா முன்பு வருவதில்லை. இப்படி எக்கச்சக்கமாக அலம்பல் செய்து வந்தார் அவர். இதனால் வியாபாரம் கருதி படாதிபதிகள் அவரை புக் பண்ணினாலும், இயக்குநர்கள் மத்தியில் அதற்கு எதிர்ப்பு எழுந்து வந்தது. இதன்காரணமாக பல படங்களில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது. இதனால்தான் இங்கு வாய்ப்பில்லாமல் இந்தி சினிமாவுக்கு சென்றார் பிரகாஷ்ராஜ். ஆனால் அங்கு நடித்த படங்கள் வெற்றி பெறாததால் இப்போது மீண்டும் தென்னிந்திய சினிமாவே கதி என்று வந்திருக்கிறார். ஆனால் முன்பு மாதிரி அலம்பல் செய்வதில்லை. மாறாக, அடக்கி வாசிக்கிறார். இதனால் அவரைக்கண்டு தலைதெறிக்க ஓடிய இயக்குநர்கள்கூட, பிரகாஷ்ராஜ்க்கு ஒரு சான்ஸ் கொடுத்துப்பார்க்கலாமே என்று அவர் பக்கம் திரும்பியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment