Tamil News

Tuesday, January 10, 2012

நண்பன் படம் பார்க்க போகும் உங்களிற்கு அதிர்ச்சி செய்தி!!


விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் நண்பன், ஷங்கர் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். ஜெமினி நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருக்கிறது.
நண்பன் படம் 2011ம் ஆண்டே வெளியீட்டிற்கு தயாராக இருந்தாலும் விஜய் நடிப்பில் வேலாயுதம் படம் வெளியானதால் 2012ல் பொங்கல் அன்று வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது.

இந்தியில் வரவேற்பை பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக், நாயகனாக விஜய், ஷங்கர் இயக்கம், ஹாரிஸ் இசை என இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 12ம் தேதியே படத்தினை வெளியீட தீர்மானித்து இருக்கிறார்கள். படத்திற்கு டிக்கெட் புக்கிங் ஆரம்பான சிறிது நேரத்திலேயே பெரிய தியேட்டர்கள் அனைத்திலும் முதல் 2 நாட்களுக்கு டிக்கெட் விற்பனை முடிந்துள்ளது.

ரசிகர்களின் இந்த வரவேற்பால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு.

No comments:

Post a Comment