Tamil News

Tuesday, January 10, 2012

பிரெஞ்சு மொழியில் வெளியாகும் முதல் தமிழ் படம் - விஜயின் நண்பன்


ஷங்கரின் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் "நண்பன்" படம் பிரான்ஸ் நாட்டில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இப்படத்தில் இலியானா , ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

நண்பன் பொங்கல் விருந்தாக திரையிடப்படுகிறது. இப்படத்தின் முன் பதிவு ஜனவரி 8 ஆம் தேதியன்று தொடங்கியது. இந்த இரு தினங்களுக்குள், அணைத்து தியேட்டர்களிலும் இரண்டு நாட்களுக்கு புக்கிங் முடிந்துவிட்டது. மேலும் படத்தினை பிரான்ஸ் நாட்டில் பிரெஞ்சு மொழியின் சப் டைட்டிலோடு வெளிவர போகிறது என்ற புதிய தகவலும் கிடைத்துள்ளது. பிரான்சில் வெளியாகும் முதல் தமிழ் படம் இதுவேயாகும். இந்த வரவேற்பால் மிக்க சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு.

நகைச்சுவை, காதல் மற்றும் ஆக்சன் கலந்த கலவையாக இருக்கும் இப்படம், எல்லா மக்களையும் கவரும் என்று இயக்குனர் நம்பிக்கையோடு கூறுகிறார் ஷங்கர்.

No comments:

Post a Comment