ரஜினியின் மகள்கள் இருவரும் நடிக்க வராமல் தயாரிப்பு, இயக்கம் என திரைக்குப் பின்னால் இயங்கி வருகின்றனர்.
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடிக்க தயாராகி வருகிறது ' 3 '. ரஜினி நடிக்க 'கோச்சடையான்' என்று தலைப்பிடப்பட்டுள்ள 3D படத்தை இயக்க இருக்கிறார் அவரது மகள் சௌந்தர்யா.
'கோச்சடையான்' படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க முடிவு செய்துள்ள சௌந்தர்யா, படத்தில் ரஜினியின் ஜோடியாக நடிக்க யாரை ஒப்பந்தம் செய்வது என திட்டமிட்டு வந்தார். பலகட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு இப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக கேத்ரினா கைஃப் நடிப்பார் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். படத்தின் முதல் பாடலை சில நாட்களில் ஒலிப்பதிவு செய்ய இருக்கிறார்கள்.
இதுகுறித்து சௌந்தர்யா " கோச்சடையான் Motion Capture என்னும் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் 3D படம். இப்படத்தில் நடிக்க கேத்ரினாவை அணுகியபோது, அவர் மிகவும் சந்தோஷமாக அதற்கு ஒப்புக் கொண்டார். அவர் ஏற்கனவே பல படங்களில் நடித்து வருவதால், இப்படத்திற்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சீக்கிரமே தேதிகளை ஒதுக்கித் தர இருக்கிறார்." என்று கூறியுள்ளார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது.
No comments:
Post a Comment