Tamil News

Tuesday, January 10, 2012

ஷாருக் கானும் கேத்ரினாவும்..........


ஏர்டெல் நிறுவனம் மொபைல் போனில் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோ பாடல், ஹலோ டியூன்ஸ், புகைப்படங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.


சமீபத்தில் வெளிவந்த ' ரா.ஒன் ' படத்தில் இடம்பெற்ற 'சமக் சலோ' பாடல் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோ பாடலாக முதல் இடத்தினை பிடித்து இருக்கிறது. இப்பாடலை AKON பாடி இருந்தார். 


ஹலோ டியூன்ஸ் பிரிவில் WHY THIS KOLAVERI பாடல் முதல் இடத்தினை பிடித்து இருக்கிறது. 2,10,000 நபர்கள் 18 நாட்களில் தங்களின் ஹலோ டியூன் பாடலாக 'கொலவெறி'யை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.


ஷாருக்கான், கேத்ரினா கைஃப்  இருவரும் புகைப்படங்களின் பதிவிறக்கத்தில் நடிகர் / நடிகையர் பிரிவில் முதல் இடத்தினை பிடித்து இருக்கிறார்கள். சல்மான்கான், ஷாகித் கபூர், இம்ரான் கான், ஜான் ஆபிரகம் ஆகியோர் ஷாருக்கானுக்கு அடுத்து இருக்கிறார்கள். நடிகையர் பிரிவில் தீபிகா படுகோன், கரீனா கபூர், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் கேத்ரினா கைஃப் உடன் டாப் 5 இடத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment