ரஜினி உடல்நிலை சரியான பிறகு நடிக்க இருக்கும் படம் 'கோச்சடையான்'. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சினேகா ரஜினிக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தினை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தாலும் படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்க இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரியாமல் இருந்தது. இப்போது படப்பிடிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 'கோச்சடையான்' படத்தின் படப்பிடிப்பு வரும் 19-ம் தேதி ஏ.வி.எம் பிள்ளையார் கோவிலில் தொடங்க இருக்கிறது. அங்கு ரஜினிகாந்த் மற்றும் சினேகா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். அதன் பிறகு படப்பிடிப்பு ECR சாலையில் உள்ள பங்களாவில் நடைபெற இருக்கிறதாம். 'கோச்சடையான்' படத்தில் ரஜினி, சினேகா உடன் நடிகர் ஆதி நடிக்க இருக்கிறாராம். இதற்காக சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆதியை சந்தித்து பேசி இருக்கிறார். இன்று (ஜனவரி 17) ஏ.ஆர்.ரஹ்மானை சந்திக்க மும்பைக்கு சென்றிருக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். 'கோச்சடையான்' படத்திற்காக ஜெர்மன் இசைகலைஞர்கள் சுமார் 130 பேர் ஒன்றிணைந்து ஒரு பாடலுக்கு இசையமைக்க இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிவது பற்றி சந்தோஷத்தில் இருக்கிறார் சௌந்தர்யா. அப்பாடா... இப்பவாச்சும் இனிப்பான செய்திய சொன்னீங்களே....!
No comments:
Post a Comment