படுக்கை அறை காட்சியில் நடிக்க மறுத்தும் டூப் நடிகையை வைத்து காட்சியை படமாக்கிய இயக்குனர் மீது பாய்ந்தார் நடிகை
சார்மிளா. ‘கிழக்கே வரும் பாட்டு’, ‘மகான் கணக்கு’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் சார்மிளா. அவர் கூறியதாவது: விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் படம் ‘நான்’. அவரது அம்மா வேடத்தில் நான் நடிக்கிறேன். ஜீவா சங்கர் இயக்குகிறார்.
எனது வேடம் சற்று வில்லித்தனமாக இருக்கும் என்று இயக்குனர் கூறி இருந்தார். நடிக்க ஒப்புக்கொண்டேன். திடீரென்று பெட் ரூம் காட்சி ஒன்றில் நடிக்க வேண்டும் என்றார். மறுத்தேன். ஷூட்டிங் நடந்த ஒரு அறையில் என்னை காத்திருக்க சொன்னார். சிறிது நேரத்துக்கு பிறகு என் காஸ்டியூம் போலவே உடை அணிந்த மற்றொரு நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியில் சென்றார்.
அதன்பிறகுதான் நான் நடித்தது போன்று டூப் நடிகையை வைத்து காட்சியை படமாக்கி இருக்கிறார் என்பது தெரிந்தது. முதலிலேயே என்னிடம் சொல்லி இருந்தால் இந்த படத்தில் நடித்திருக்க மாட்டேன். எனக்கு குடும்பம், குழந்தை இருக்கிறது. டூப்பை வைத்து நான் நடித்ததுபோல் எடுத்த காட்சியை நீக்க வேண்டும்.
No comments:
Post a Comment