முன்பெல்லாம் எம்ஜியார், ரஜினி நடித்த பழைய படங்களின் காட்சிகளை தங்களது படத்தில் இணைப்பார்கள். அவர்கள் திரையில் தோன்றியவுடன் ரசிகர்கள் விசிலடித்து கொண்டாடுவார்கள். இப்போது ஒரு படி மேலே போய், மிக சமீபத்தில் வந்து வரவேற்பைப் பெற்ற படங்களின் காட்சிகளைப் பயன்படுத்தி ரசிகர்களை கவர்வது இப்போது துவங்கியுள்ளது.
மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடித்து வெளிவந்து இருக்கும் படம் 'வேட்டை'. லிங்குசாமி இயக்கி தயாரித்து இருக்கிறார். யு.டிவி நிறுவனம் இப்படத்தினை வெளியிட்டு நன்றாக விளம்பரப்படுத்தி வருகிறது.
இப்படத்தில் வரும் சில காட்சிகளில் தேவைக்காக அஜீத் நடித்த ’மங்காத்தா’ மற்றும் ஜீவா நடித்த ’கோ’ படத்தில் இருந்தும் சில காட்சிகளை சேர்த்து இருக்கிறார்களாம்.
இதுகுறித்து யு.டிவி தனஞ்செயன் தனது டிவிட்டர் இணையத்தில் " ’வேட்டை’யில் தல அஜீத்தின் மங்காத்தா மற்றும் கே.வி.ஆனந்தின் ’கோ’ ஆகிய படங்களில் இருந்து சில காட்சிகளைப் பயன்படுத்தியுள்ளோம். பார்த்து மகிழுங்கள்” என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment