
'நான்' திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். 'காதலில் விழுந்தேன்', 'வேட்டைக்காரன்', 'நினைத்தாலே இனிக்கும்', உள்ளிட்ட பிரபல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி. இவர் முதன் முதலாக 'நான்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, இசையமைப்பாளர்கள் திரைப்படத்தில் நடிப்பது புதிய விசயம் இல்லை. மைக்கேல் ஜாக்ஸன், மடோனா வரையில் எல்லோருமே நடித்துள்ளார்கள். தமிழ் இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் விளம்பரத்தில் நடிக்கின்றனர். நான் திரைப்படத்தில் நடித்துள்ளேன் என்றார். இந்த திரைப்படம் பிப்ரவரி மாதத்தில் வெளியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். எனது நண்பர் தான் படத்தின் இயக்குநர். ஏதாவது வித்தியாசமாக செய்து பார்க்க வேண்டும் என்ற துடிப்பு நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அதற்காகவே திரைப்படத்தில் நடித்தேன். படம் நன்றாக வந்திருக்கிறது. அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இது பிடிக்கும் என்று அவர் தெரிவித்தார். விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷனும் ஏ.வி.ஆர். டாக்கீஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள 'நான்' படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் ஜீவா சங்கர். இவர் மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவாவுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாருகூட வேல பாத்தா என்ன? நடிச்சா சரி!
No comments:
Post a Comment