கழுகு திரைப்படத்தின் படப்பிடிப்பை யானைக்கு பயந்து ரத்து செய்ததாக கழுகு நாயகன் கிருஷ்ணா கூறியுள்ளார். தமிழில் கற்றது களவு பட நாயகன் கிருஷ்ணா, நாயகி பிந்து மாதவி இருவரும் கழுகு திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இப்படத்தை டாகிங்க்ஸ் டைம்ஸ் மூவிஸ் பட நிறுவனம் தயாரித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் படப்பிடிப்பின் போது யானையிடமிருந்து தப்பிய அனுபவத்தை படக்குழுவினர் கூறியுள்ளனர். மூணார் அருகே நடந்த கழுகு படப்பிடிப்பில் மலைப்பகுதியில் உள்ள பாறைகளுக்கு மத்தியில் எங்களை உள்ளூர்வாசி ஒருவர் திடீரென ஒளிந்துக்கொள்ள சொன்னார். அதிர்ச்சியோடு நாங்களும் மறைந்து கொண்டோம். படையப்பா என்ற யானை இதுவரை இங்கே ஐந்து பேரை கொன்றுள்ளது. நேற்றுகூட ஒருவரை மிதித்து கொன்றது என்று அந்த உள்ளூர்வாசி கூறினார். இதையடுத்து அந்த யானை படக்குழுவினரை கடந்து போனது. படப்பிடிப்பு கூட்டத்தை பார்த்திருந்தால் ஏதாவது விபரீதம் நடந்திருக்கும் என்று அந்த உள்ளூர்வாசி சொல்ல மிரண்டு போய் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வந்தோம் என்று படத்தின் நாயகன் கிருஷ்ணா கூறியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். அச்சோடா பாவம்.....! எப்டியோ தப்பிச்சிட்டீங்கள்ல சந்தோஷம்!
No comments:
Post a Comment