'மாப்பிள்ளை', 'எங்கேயும் காதல்' படங்களைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமாகும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ஹன்சிகா.
மதுரையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது சில ரசிகர்கள் ஹன்சிகாவை அணுகி அவருக்கு கோவில் கட்டப் போவதாக கூறியுள்ளனர். அதற்கு ஹன்சிகா மறுத்து விட்டார்.
அதையும் மீறி ரசிகர்கள் ஹன்சிகாவுக்கு கோவில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கோவில் கட்டப்படுவது குறித்து ஹன்சிகா கூறியிருப்பது :
" எனக்கு கோவில் கட்டப் போவதாக ரசிகர்கள் என்னிடம் கூறியதும் ஆச்சர்யமானேன். உயிரோடு இருப்பவர்களுக்கு கோவில் கட்டுவது இல்லை. ரசிகர்கள் என்மேல் அதிகமான அன்பும் மரியாதையும் வைத்துள்ளனர்.
கடவுளோடு மனிதர்களை ஒப்பிட முடியாது. எனவே கோவில் கட்டுவதற்கான பணத்தை ஏழைகளுக்கு உதவிகள் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் "
No comments:
Post a Comment