Tamil News

Wednesday, January 11, 2012

நீச்சல் உடையில் போஸ்: நடிகை ராகினி திடீர் பல்டி ..


சீனியர் நடிகைகள் நீச்சல் உடையில் போஸ் கொடுத்ததற்கு கண்டனம் தெரிவித்த ராகினிக்கு எதிர்ப்பு கிளம்பியதால் திடீர்
 பல்டி அடித்தார். கன்னட நடிகைகள் அன்டிரிட்டா ராய், நிதி சுப்பையா இருவரும் காலண்டர் ஒன்றுக்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்திருந்தனர்.

இதற்கு நடிகை ராகினி கண்டனம் தெரிவித்தார். என்னையும் நீச்சல் உடையில் போஸ் கொடுக்க அழைத்தார்கள். மறுத்துவிட்டேன். இவர்கள் எப்படி ஒரு போட்டோ செஷனுக்கு இப்படி போஸ் கொடுத்தார்களோ தெரியவில்லை என்று கண்டித்திருந்தார். இதற்கு இரு நடிகைகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.‘எங்களது தனிப்பட்ட விஷயத்தில் தலையிட ராகினிக்கு உரிமை இல்லை’ என்று கூறினார்கள். இதையடுத்து ராகினி தான் சொன்ன கருத்தை வாபஸ் பெற்றார். யாரையும் தாக்கவில்லை என்று திடீர் பல்டி அடித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘சீனியர் நடிகைகள் போட்டோவுக்கு போஸ் கொடுத்ததை விமர்சிக்கவில்லை. இதே காலண்டருக்கு என்னை நீச்சல் உடையில் போஸ் கொடுக்க கேட்டபோது மறுத்துவிட்டேன். கவுரவமான பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும்போது இப்படியொரு செயலில் ஈடுபடமாட்டேன்’ என்றுதான் கூறி இருந்தேன்.
மேலும் அன்டிரிட்டா ராய் எனக்கு நல்ல தோழி. அவரை விமர்சிக்கும் அளவுக்கு நான் எல்லை மீறமாட்டேன். நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது’’ என்றார்.

No comments:

Post a Comment