பாலிவுட் நடிகை கரீனா கபூர், நடிகர் சைப்அலிகான் திருமணம் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடக்கிறது. பாலிவுட்டில்
நீண்ட... காலமாக ஜோடியாக இருப்பவர்கள் சைப்அலிகானும், கரீனா கபூரும். இவர்களின் திருமணம் தள்ளிக்கொண்டே போனது.இறுதியில் 2012 தொடக்கத்தில் திருமணம் செய்ய மணமக்கள் முடிவு செய்தனர். இதற்கிடையே சைப்அலிகானின் தந்தை நவாப் மன்சூர்அலிகான் பட்டோடி மரணம் அடைந்ததால் இவர்களின் திருமணம் மீண்டும் தள்ளிப்போனது.
இந்நிலையில் சைப்அலிகான் முதன் முதலாக தயாரிக்கும் `ஏஜெண்ட் வினோத்` படம் வெளியான பிறகு தான் திருமணம் என்று கூறப்பட்டது. அந்த படத்தில் சைபும், கரீனாவும் நடிக்கின்றனர். இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது மார்ச் மாதம் 28ம்தேதி வெளியிடப்படுகிறது. இதையடுத்து சைபும், கரீனாவும் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கணவன்-மனைவியாக விரும்புகின்றனர்.
No comments:
Post a Comment