நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்க தேர்தலில் டைரக்டர்கள் சேரன், அமீர் இருவரும் ஓரணியில் நின்று இயக்குநர் பாரதிராஜாவுக்கு எதிராக போட்டியிட முடிவெடுத்தனர். ஆனால் பின்னர் சில பெரிய தலைகள், தலையிட்டு பாரதிராஜாவுக்கு எதிராக தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை நிறுத்துமாறு அவர்களை கேட்டுக்கொண்டனர். இதனால் அதிலிருந்து விலகினார்கள். இதைத் தொடர்ந்து தேர்தலில் பாரதிராஜா தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றார். ஆனால் துணைத்தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சேரன் இதுவரை பதவி வகித்து வந்தவர் இப்போது திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்து விட்டாராம. ஆனால் இதற்கான கடிதத்தை அவர் அனுபபியபோது அதை பாரதிராஜா ஏற்கவில்லையாம். கடிதத்தை அப்படியே நிலுவையில் வைத்திருக்கிறாராம். ஆனால் இன்னும் சில வாரங்களில் எனது கடிதம் ஏற்கபடாவிட்டால், நான் ராஜினாமா செய்வதற்கான காரணத்தை மீடியாக்கள் மூலம் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார் சேரன். இதனால் என்னென்ன சிக்கல்கள் ஏற்படுமோ என்று இயக்குநர் சங்க வட்டாரம் அதிர்ச்சியில் உள்ளது. என்னதான்ய்யா நடக்குது...?! நிஜ அரசியல்வாதிககூட ஒங்ககிட்ட தோத்துப்போயிடுவாங்க போல.....
No comments:
Post a Comment