Tamil News

Tuesday, January 10, 2012

சற்குணம் அடுத்த படம் !


'வாகை சூட வா' படத்தின் மூலம் திரைப்பட விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவர் சற்குணம். 'வாகை சூட வா' படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

சற்குணம் அடுத்ததாக என்ன படம் இயக்க இருக்கிறார் என்று எதிர்ப்பார்ப்புகள் நிலவின. இது குறித்து இயக்குனர் சற்குணத்திடம் கேட்ட போது " தாணு சாருக்கு ஒரு படம், அம்மா கிரியேஷன்ஸ் சிவா சாருக்கு ஒரு படம் என இரண்டு படங்கள் இயக்க இருக்கிறேன்.

தாணு சார் தயாரிக்க இருக்கும் படம் ஒரு ஆக்ஷன் படம். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் தயாராகிறது. இரண்டிலுமே முன்னணி நாயகர்கள் நடிக்க இருக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சிவா சார் படம் ஒரு காதல் கதை. இரண்டு படங்களில் எதை முதலில் இயக்க இருக்கிறேன் என்பது பற்றி பொங்கலுக்குப் பிறகு முறையான அறிவிப்பு வரும்.  " என்று தெரிவித்தார்.

சற்குணம் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் மட்டும் கோடம்பாக்கத்தை வலம் வருகிறது.

No comments:

Post a Comment