Tuesday, January 17, 2012
அடுத்த மாதம் விஜய்யின் 'நான்' வெளியீடு..
'நீர்ப்பறவை' 20-ம் தேதி ஆரம்பம்!
இந்திய அளவில் சிறந்த நடிகை, சிறந்த பாடலாசிரியர் உட்பட மூன்று தேசிய விருதுகளை வென்ற 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தை இயக்கிவர் சீனு.ராமசாமி. அடுத்து இவருக்கு வாய்ப்புக்கள் குவிந்தாலும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலினை தனது தயாரிப்பாளராக தேர்ந்தெடுத்தார். 'நீர்ப்பறவை' என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒரு கடலோர கிராமத்தின் கதையை இயக்குகிறார். தூத்துக்குடி மற்றும் அதன் கடலோர கிராமங்களில் இம்மாதம் 20-ம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்குகிறது சீனு.ராமசாமியின் டீம்! இப்படத்தில் 'வெண்ணிலா கபடிக்குழு', 'குள்ளநரிக்கூட்டம்', 'பலே பாண்டியா' ஆகிய படங்களில் நடித்த விஷ்ணு நாயகனாக நடிக்கிறார். 'பொக்கிஷம்', 'வெப்பம்', 'கழுகு' ஆகிய படங்களில் நடித்த பிந்து மாதவி நாயகியாக நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, 'பூ' ராம், பிளாக் பாண்டி, அருள்தாஸ், ரோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து எம்.செண்பகமூர்த்தி. ஆர்.அர்ஜுன் துரை ஆகியோர் படத்தை தயாரிக்கிறார்களாம். இவர் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. சீனு ராமசாமி, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். ஆனால் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். ஒளிப்பதிவு பாலாவுக்குப் பிடித்தமான பாலசுப்ரமணியம். தற்போது ஆண்டனியை பின்னுக்கு தள்ளிவிட்டு எடிட்டிங்கில் முந்திவரும் மு.காசி விஸ்வநாதன்தான் படத்துக்கு எடிட்டிங். கலை இயக்குநர்- செல்வகுமார். சீனு ராமசாமி தனது 'தென்மேற்குப் பருவக்காற்றில்' அறிமுகப்படுத்திய அதே என்.ஆர்.ரகுநந்தன் இந்தப்படத்துக்கும் இசை. 'தென்மேற்கு பருவக்காற்றில்' தேசிய விருது பெற்றதைத் தொடர்ந்து அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். முதலில் இரண்டு பாடல்களை படம்பிடித்துவிட்டு அதன்பிறகு உரையாடல் காட்சிகளை படம் பிடிக்க இருக்கிறார்கள். ஓ... பேஷா ஆரம்பிங்க... அடுத்த விருத வாங்கணும்ல.....!
புதுவையில் விஜய்?
புயலால் புதுவை பகுதி முழுவதும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடிகர் விஜய் இன்று (சனிக்கிழமை) புதுவை வருகிறார். புதுவை சுப்பையா சாலையில் குபேர் திருமண மண்டபம் அருகே காலை 9 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, உடை, பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை வழங்குகிறார். நிகழ்ச்சிக்கு அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸ்சி ஆனந்து தலைமை தாங்குகிறார். நிகழ்ச்சியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி புஸ்சி ஆனந்து கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் பணி தொடர வாழ்த்துகள்!
நாளை மறுநாள் 'கோச்சடையான்' ஆரம்பம்!..
ரஜினி உடல்நிலை சரியான பிறகு நடிக்க இருக்கும் படம் 'கோச்சடையான்'. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சினேகா ரஜினிக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தினை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தாலும் படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்க இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரியாமல் இருந்தது. இப்போது படப்பிடிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 'கோச்சடையான்' படத்தின் படப்பிடிப்பு வரும் 19-ம் தேதி ஏ.வி.எம் பிள்ளையார் கோவிலில் தொடங்க இருக்கிறது. அங்கு ரஜினிகாந்த் மற்றும் சினேகா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். அதன் பிறகு படப்பிடிப்பு ECR சாலையில் உள்ள பங்களாவில் நடைபெற இருக்கிறதாம். 'கோச்சடையான்' படத்தில் ரஜினி, சினேகா உடன் நடிகர் ஆதி நடிக்க இருக்கிறாராம். இதற்காக சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆதியை சந்தித்து பேசி இருக்கிறார். இன்று (ஜனவரி 17) ஏ.ஆர்.ரஹ்மானை சந்திக்க மும்பைக்கு சென்றிருக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். 'கோச்சடையான்' படத்திற்காக ஜெர்மன் இசைகலைஞர்கள் சுமார் 130 பேர் ஒன்றிணைந்து ஒரு பாடலுக்கு இசையமைக்க இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிவது பற்றி சந்தோஷத்தில் இருக்கிறார் சௌந்தர்யா. அப்பாடா... இப்பவாச்சும் இனிப்பான செய்திய சொன்னீங்களே....!
அஜித்துடன் நடிப்பாரா ஆர்யா?
அஜித் - விஷ்ணுவர்தன் இணையும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகில் நிலவி வருகிறது. ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஒரு முக்கிய வேடத்திற்கு விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணா நடிப்பார் என்று தகவல்கள் பரவியது. ஆனால் கிருஷ்ணா அத்தகவலை மறுத்தார். விஷ்ணுவர்தனின் 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்', 'சர்வம்' ஆகிய படங்களில் நடித்தார் ஆர்யா. விஷ்ணுவர்தனும், ஆர்யாவும் நெருங்கிய நண்பர்கள். அஜித்துடன் இணையும் படத்தில் இருக்கும் மற்றொரு முக்கிய வேடத்திற்கு ஆர்யாவை ஒப்பந்தம் செய்ய நினைத்தாராம் விஷ்ணுவர்தன். ஆர்யா இப்படத்தில் நடிக்க பெரும் ஆர்வத்தோடு இருந்தாலும், தற்போது செல்வராகவன் இயக்கும் 'இரண்டாம் உலகம்' படத்திற்கு தனது தேதிகளை ஒதுக்கி கொடுத்து விட்டதால், என்ன செய்வது என்று யோசித்து வருகிறாராம். அறிந்தும் அறியாமலும் தல பட்டியல்ல சேர்ந்துடுவாரு பாருங்களேன்....!
வசூலை வாரி குவிக்கும் பொங்கல் படங்கள்..
பொங்கல் விடுமுறைக்கு விஜய் நடிக்கும் 'நண்பன்', மாதவன், ஆர்யா நடிக்கும் 'வேட்டை' என இரண்டு படங்கள் வெளியாகின. அப்படங்கள் குறித்து ஒரு பார்வை:
நண்பன்: ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து இருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் 12-ம் தேதியே படத்தினை வெளியிட்டார்கள். 12, 13 உள்ளிட்ட தேதிகளில் எந்த படமும் வெளியாகாததால் 'நண்பன்' படம் தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக நன்றாக கல்லா கட்டியது. வழக்கமான மாஸ் படத்தினை போல இல்லாமல் விஜய்யின் எதார்த்தமான நடிப்பு, ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கம், இந்தியில் வரவேற்பைப் பெற்ற கதை என படம் பார்க்க வரும் ரசிகர்களை நண்பனாக்கி இருக்கிறது 'நண்பன்'.
வேட்டை: மாதவன், ஆர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம். 'ரன்', 'பையா' படத்தினை போல, இளமைத் துள்ளலுடன் திரைக்கதை அமைத்து இருக்கிறார் லிங்குசாமி. மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடிப்பு, லிங்குசாமி வேகமான திரைக்கதை அமைப்பு உள்ளிட்டவை படம் பார்க்கும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. ரசிகர்களை மனதை வேட்டையாடி வருகிறது 'வேட்டை'. இதுவரை தாவணியில் வலம் வந்த அமலா பால், இப்படத்தில் 'கட்டிப்புடி என்னை கட்டிப்புடி' பாடலில் கவர்ச்சிகரமான உடைகளில் ஆடியிருக்கிறார்.
'நண்பன்' படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு, 'வேட்டை' படத்திற்கு யு.டிவி நிறுவனத்தின் விளம்பர யுத்தி, இரண்டு படங்களுக்குமே அரசாங்கத்தில் இருந்து கிடைத்த வரி விலக்கு என தமிழ் திரையுலகத்திற்கு 2012 நல்லதொரு தொடக்கமாக அமைந்து இருக்கிறது. ஆரம்பமே அமர்க்களமா... ஒரே கொண்டாட்டந்தான் போங்க!
அனோஷ்கா எங்களை கொள்ளை கொண்டுவிட்டாள்: ராதிகா..
அஜித், ஷாலினியின் மகள் அனோஷ்கா ஒரு அழகி என்று நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். தல அஜித், அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் சரத்குமார், அவரது மனைவி ராதிகா, மகன் ராகுல் ஆகியோர் அண்மையில் சந்தித்தனர். அப்போது அஜித்தின் செல்ல மகள் தனது மனதைக் கொள்ளை கொண்டதாக ராதிகா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, அஜித் மகள் அனோஷ்கா ஒரு அழகி. அவள் எங்கள் மனங்களை எல்லாம் கொள்ளை கொண்டுவிட்டாள் என்று எழுதி புகைப்படமும் வெளியிட்டுள்ளார். அஜித் படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது செல்ல மகளுடன் விளையாடி மகிழ்கிறார். ஷூட்டிங், ஷூட்டிங் என்று ஓடிவிடுவதால் மகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என்பதால் அஜித் புத்தாண்டை மனைவி, மகளுடன் சிங்கப்பூரில் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேடம்... சாரோட அடுத்த படத்துல சான்ஸ் வேணுமா....?
21 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் பாரதிராஜா-கங்கைஅமரன்!
பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக, கங்கை அமரன் தெரிவித்துள்ளார். கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் பாரதிராஜா இயக்கிய 'என் உயிர் தோழன்' என்ற திரைபடம் வெளியானது. பாபு, ரமா உள்ளிட்டோர் நடித்த இப்படத்தின் அனைத்து பாடல்களையும், கங்கை அமரன் எழுதி இருந்தார். இந்த நிலையில் நடிகர் அமீர், நடிகை இனியா, கார்த்திகா உள்ளிட்டோரின் நடிப்பில் பாரதிராஜா இயக்கி வரும் படம் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்'. இப்படத்தில் வைரமுத்து, கங்கை அமரன் உள்ளிட்ட 2 பேரும் பாடல்களை எழுதி உள்ளனர். பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இது குறித்து கங்கை அமரன் கூறியதாவது, கடந்த 21 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிராஜா இயக்கும் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன், என்றார். பழைய நினைவுகளை அசைபோட்டீங்களாக்கும்....?!
எதிர்ப்பைக் கிளப்பிய ரிஷிகாவின் நிர்வாணம்!
கன்னட நடிகை ரிஷிகா நிர்வாணமாக போஸ் கொடுத்ததைக் கண்டித்து கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் வில்லி வேடத்தில் நடிக்கும் கன்னட படம் ‘யாராத்ரே நானாகெனு’. எஸ்.கே.பஷித் இயக்குகிறார்.
இதில் பிரபல நடிகை நிஷா கோதாரி (ஜேஜே படத்தில் நடித்த அமோகா) போலீசாக நடிக்கிறார். ரிஷிகா சிங்தான் இந்தப் படத்தின் ஹீரோயின். இப்படத்தின் தொடக்க விழா பெங்களூரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நேற்று நடந்தது.
விழாவை முன்னிட்டு கன்னட பத்திரிகைகளில் நேற்று விளம்பரங்களும் வெளியாயின. அதில் ரிஷிகா சிங் ஆடை எதுவும் இல்லாமல் உடல் முழுவதும் பெயின்ட் அடித்துக்கொண்டு நிர்வாண போஸ் கொடுப்பதுபோன்ற போட்டோ வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
ஆபாச போஸ் கொடுத்ததற்காக ரிஷிகாவுக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தன. பட விழா நடந்த ஸ்டுடியோ முன்பு எதிர்ப்பு கோஷங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆனால் இதற்காக ரிஷிகா கவலைப்படவில்லை. அவர் கூறுகையில், "நான் போஸ் கொடுத்ததில் எந்த தவறும் இல்லை. படத்துக்கு இக்காட்சிதேவைப்பட்டதால் போஸ் தந்தேன். பரபரப்புக்காக கொடுக்கவில்லை" என்றார்.
சமீபத்தில் தண்டுபால்யா என்ற படத்தில் பூஜாகாந்தி நிர்வாணமாக நடித்தற்கு கன்னட அமைப்புகள் சில கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து தான் அப்படி நடிக்கவில்லை என அவர் மறுத்திருந்தது நினைவிருக்கலாம்!
Sunday, January 15, 2012
நண்பனுக்கு முழு வரிவிலக்கு ..
நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு அளித்துள்ளது அரசு. ஜெயலலிதா ஆட்சியில் வரிவிலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு அளித்துள்ளது அரசு. ஜெயலலிதா ஆட்சியில் வரிவிலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் தலைப்பு வைத்தாலே போதும், வரிவிலக்கு உண்டு என்று முன்பு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் தரமற்ற குப்பைப் படங்களும் தமிழில் தலைப்பு வைத்ததற்காக வரிவிலக்கு பெற்றன. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது... அனைவரும் பார்க்கத்தக்க யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், தரமான படமாக இருக்க வேண்டும். அப்போதுதான் வரிவிலக்கு என நிபந்தனைகள் விதித்தது. வரிவிலக்கு பெறத் தகுதியான படங்களை தேர்வு செய்ய 22 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது அரசு. இதில் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு பார்த்து பரிந்துரைக்கும் படத்துக்கே வரிவிலக்கு கிடைக்கும். வரிவிலக்குக்கு படங்களை அனுப்ப ரூ 10000 கட்டணம் உண்டு. இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விஜய் நடித்துள்ள நண்பன் படம் இருப்பதால் படத்துக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில், விஜய்யுடன் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் நடிக்க பொங்கலுக்கு வெளியாகியுள்ள இந்தப் படத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் வரிவிலக்கு அறிவித்துள்ளது வசூலை மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா பதவிக்கு வந்த இந்த 7 மாதங்களில் வரி விலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வரிவிலக்கென்ன... சிறந்த படத்துக்கான விருதே கொடுக்கலாம்......
டாப்சியா... தலைதெறிக்க ஓடும் இயக்குநர்கள்!
தமிழில் ஆடுகளம் வெற்றி என்றபோதும், அதன்பிறகு டாப்சி நடித்த வந்தான் வென்றான் தோல்வியடைந்ததால் அடுத்தடுத்து அவரை படங்களுக்கு புக் பண்ணவே ஆளில்லை. இதனால் கொழுக்மொழுக்கென்ற தனது உடல்கட்டுதான் தனது வாய்ப்புகளை தடுக்கிறது என்று கருதிய டாப்சி, சில மாதங்களாக கடினமாக டயட்ஸ் இருந்து உடம்பை ஸ்லிம்மாக்கினார். ஆனால் கொழுகொழு நடிகைகளையே பார்த்து பழக்கப்பட்ட கோடம்பாக்க இயக்குநர்கள், கதையுடன் டாப்சியை தேடிச்சென்றபோது ஒட்டடை குச்சி மாதிரி நின்று கொண்டிருந்தாராம். இதனால் டாப்சிக்காக கதை பண்ணி சென்ற இயக்குநர்கள்கூட இப்போது அவரது தோற்றத்தைக்கண்டு ஓட்டம் பிடித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில், இந்த மாதிரி உடல்கட்டு இந்திக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்று சிலர் அட்வைஸ் செய்ய, மும்பைக்கு சென்று முகாமிட்டிருக்கிறார் டாப்சி. ஐயோ... பாவம்! பாலிவுட்லயாவது வரவேற்பு இருந்தா சரி!
மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பிய பிரகாஷ்ராஜ் ..
வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜின் மார்க்கெட் எப்போது எகிறியதோ, அப்போதில் இருந்தே தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ஏகப்பட்ட டார்ச்சர் கொடுத்து வருகிறார். சொன்னபடி ஸ்பாட்டுக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் டேக் ரெடி என்றதும் கேமரா முன்பு வருவதில்லை. இப்படி எக்கச்சக்கமாக அலம்பல் செய்து வந்தார் அவர். இதனால் வியாபாரம் கருதி படாதிபதிகள் அவரை புக் பண்ணினாலும், இயக்குநர்கள் மத்தியில் அதற்கு எதிர்ப்பு எழுந்து வந்தது. இதன்காரணமாக பல படங்களில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது. இதனால்தான் இங்கு வாய்ப்பில்லாமல் இந்தி சினிமாவுக்கு சென்றார் பிரகாஷ்ராஜ். ஆனால் அங்கு நடித்த படங்கள் வெற்றி பெறாததால் இப்போது மீண்டும் தென்னிந்திய சினிமாவே கதி என்று வந்திருக்கிறார். ஆனால் முன்பு மாதிரி அலம்பல் செய்வதில்லை. மாறாக, அடக்கி வாசிக்கிறார். இதனால் அவரைக்கண்டு தலைதெறிக்க ஓடிய இயக்குநர்கள்கூட, பிரகாஷ்ராஜ்க்கு ஒரு சான்ஸ் கொடுத்துப்பார்க்கலாமே என்று அவர் பக்கம் திரும்பியிருக்கிறார்கள்.
தனுஷை நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கேன்: ஐஸ்வர்யா ..
சமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதிஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ்ருதி. ஆனால் தனுஷ் ஒன்றும் பேசவில்லை. மாறாக அன்று மாலை நடந்த 3 படப்பிடிப்பில் மனைவி ஐஸ்வர்யாவுடன் ஜாலியாக போஸ் கொடுத்திருந்தார் அவர். ஆனால் ஒரு மனைவியால் இதுபோன்ற செய்திகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியுமா... ஐஸ்வர்யா கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவே இல்லை. சூப்பர் ஸ்டார் மகள் அல்லவா... தனுஷ் - ஸ்ருதி விவகாரம் குறித்து அவர் சமீபத்தில் கூறுகையில், "நான் இருப்பது சினிமா துறை. இங்கே அனைத்தையும் எதிர்கொண்டாக வேண்டிய சூழல். ஆனால் தனுஷ் - ஸ்ருதி பற்றி வந்தது வெறும் வதந்திதான். அதில் எந்த உண்மையும் இல்லை. தனுஷை நன்கு புரிந்தவள் நான். அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை, எங்கள் குடும்பத்தின் பக்கபலத்துடன் இதுபோன்ற சோதனைகளைக் கடந்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது", என்றார் நிதானமாக. என்னபண்றது... நம்பித்தான ஆகணும்....! வேற வழி..?!
சூர்யாவை இயக்கும் படம் கைவிடப்பட்டதா?: ஹரி அதிர்ச்சி ..
சூர்யாவை வைத்து இயக்க திட்டமிட்டிருந்த படத்தை கைவிடவில்லை. படத்துக்கான வேலை தீவிரமாக நடந்து வருகிறது என்று இயக்குநர் ஹரி கூறினார். இதுபற்றி ஹரி கூறியதாவது: சூர்யா நடித்த சிங்கம் பெரிய வெற்றி அடைந்தது. இதையடுத்து மீண்டும் அவர் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். அதற்கான ஸ்கிரிப்ட் மெருகேற்றும் பணியில் மும்முரமாக இருக்கிறேன். இந்நிலையில் சூர்யாவை இயக்கும் படம் கைவிடப்பட்டதாக நெட்டில் வதந்தி பரப்புகிறார்கள். இது அதிர்ச்சி அளிக்கிறது. தற்போது மாற்றான் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். அதற்கான ஷூட்டிங், புரமோஷன் என்று பிஸியாக இருக்கின்றனர். இதற்கிடையில் என் படம் பற்றிய தகவல்களை சொன்னால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் அமைதியாக இருக்கிறேன். படம் டிராப் என்று எப்படி செய்தி வருகிறது? என சூர்யாவே என்னிடம் கேட்டார். சூர்யாவிடம் இப்படத்தின் கதையை 6 மாதம் முன்பே கூறிவிட்டேன். இப்போதும் அடிக்கடி சந்தித்து அதுபற்றி பேசி வருகிறோம். இப்படம் சிங்கம் 2-ம் பாகமா என்கிறார்கள். அதுபற்றி இப்போது சொல்ல முடியாது. இன்னும் சில நாட்களில் சூர்யாவும் நானும் இதுபற்றி அறிவிப்போம். கமர்சியலாக உருவாகும் இப்படம் தமிழ் திரையுலகில் புது முயற்சியாக இருக்கும். அனுஷ்கா ஹீரோயின். சந்தானம் முதன்முறையாக எங்கள் கூட்டணியில் இணைகிறார். மார்ச்சில் ஷூட்டிங் தொடங்கும். என் படங்களில் பாடல் காட்சிகளை மட்டுமே இதுவரை வெளிநாடுகளில் படமாக்கியுள்ளேன். இந்த படத்தின் முக்கிய காட்சிகள் நைஜீரியா, தென்ஆப்ரிக்காவில் படமாக இருக்கிறது. காரைக்குடியில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணியும் நடந்துவருகிறது. ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஹரி கூறினார். அப்டிபோடு.. இந்த கூட்டணிய பிரிக்க முடியுமா...? ஹாட்ரிக்கூட அடிப்பாங்கப்பா..........
பத்து கிலோவுக்கு மேல் எடையை குறைத்த சோனா ..
நடிகை சோனா மலேசியா சென்று தன் எடையை பத்து கிலோவிற்கும் அதிகமாக குறைத்துள்ளார். நடிகை, தயாரிப்பாளர், பெண் தொழிலதிபர் என பன்முகங்கொண்ட சோனா சர்ச்சையில் சிக்கி, கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது. இதன்பின் எஸ்.பி.பி.சரண், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, வைபவ் ஆகியோர் சத்யன் தியேட்டரில் நடைபெற்ற 'அட்டகத்தி' பாடல் வெளியீட்டில் சகஜமாக பங்கேற்றனர். வெளி நாடுகளுக்குச் சென்று கொழுப்பு உறிஞ்சும் சிகிச்சையை அடிக்கடி மேற்கொண்டு தன் எடையை குறைத்துள்ளார் சரண். அதைப்போலவே நடிகை சோனாவும் சமீபமாக மலேசியா சென்று தன் உடல் எடையை குறைப்பதற்கு, கொழுப்பு உறிஞ்சும் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். பத்து கிலோவிற்கும் மேல் எடையை குறைத்து சரணை விட மெலிதான தோற்றத்தில் காணப்படுகிறார். இருவருக்கும் இடையே இப்படி ஒரு ஒத்துமை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறைக்கிறதுல கூட போட்டிதானா...?
யானையிடமிருந்து தப்பிய 'கழுகு' டீம்!
கழுகு திரைப்படத்தின் படப்பிடிப்பை யானைக்கு பயந்து ரத்து செய்ததாக கழுகு நாயகன் கிருஷ்ணா கூறியுள்ளார். தமிழில் கற்றது களவு பட நாயகன் கிருஷ்ணா, நாயகி பிந்து மாதவி இருவரும் கழுகு திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இப்படத்தை டாகிங்க்ஸ் டைம்ஸ் மூவிஸ் பட நிறுவனம் தயாரித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் படப்பிடிப்பின் போது யானையிடமிருந்து தப்பிய அனுபவத்தை படக்குழுவினர் கூறியுள்ளனர். மூணார் அருகே நடந்த கழுகு படப்பிடிப்பில் மலைப்பகுதியில் உள்ள பாறைகளுக்கு மத்தியில் எங்களை உள்ளூர்வாசி ஒருவர் திடீரென ஒளிந்துக்கொள்ள சொன்னார். அதிர்ச்சியோடு நாங்களும் மறைந்து கொண்டோம். படையப்பா என்ற யானை இதுவரை இங்கே ஐந்து பேரை கொன்றுள்ளது. நேற்றுகூட ஒருவரை மிதித்து கொன்றது என்று அந்த உள்ளூர்வாசி கூறினார். இதையடுத்து அந்த யானை படக்குழுவினரை கடந்து போனது. படப்பிடிப்பு கூட்டத்தை பார்த்திருந்தால் ஏதாவது விபரீதம் நடந்திருக்கும் என்று அந்த உள்ளூர்வாசி சொல்ல மிரண்டு போய் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வந்தோம் என்று படத்தின் நாயகன் கிருஷ்ணா கூறியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். அச்சோடா பாவம்.....! எப்டியோ தப்பிச்சிட்டீங்கள்ல சந்தோஷம்!
சாட்சியில்லாமல் எழுதினால் சட்டப்படி நடவடிக்கை: ஸ்ருதி ஆவேசம்!
நடிகர் தனுஷுடன் காதல் என்ற செய்திக்கு நடிகை ஸ்ருதிஹாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். என்னைப் பற்றி வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன், என்று ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். தனுஷ்-ஸ்ருதிஹாசன் ஜோடி '3' படத்தில் நாயகன் - நாயகியாக நடித்துள்ளனர். இந்த படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷுக்கும், ஸ்ருதிஹாசனுக்கும் இடையே காதல் என்ற செய்தி கடந்த வாரம் கோடம்பாக்கத்தையே பரபரப்புக்குள்ளாக்கியது. இருவரும் ஜோடியாக பார்ட்டிகளில் பங்கேற்றதாகவும் செய்திகள் வெளியாயின. இந்த காதல் வதந்தியை ஏற்கனவே ஸ்ருதி மறுத்துள்ள நிலையில், மீண்டும் ஒருமுறை மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள புதிய பேட்டியொன்றில், "என்னையும், தனுஷையும் இணைத்து வெளியான தகவல்கள் எதுவும் உண்மை இல்லை. அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. அதை படித்தபோது, காமெடியாக இருந்தது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எந்த சாட்சியும் இல்லை. ஆதாரம் இல்லாமல், சாட்சி இல்லாமல் எழுதுவது சட்டப்படி குற்றம். எனவே அப்படி எழுதியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன், என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இரண்டு பேர் குடும்பத்தினருக்கும் சமூகத்தில் மரியாதை இருக்கிறது. அப்படி மரியாதைக்குரிய இரண்டு குடும்பத்தினரை பற்றி மட்ட ரகமான வதந்திகளை பரப்புவது, நாகரீகம் அல்ல. இதற்கு மேல் அந்த விஷயம் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை, என்றும் கூறியிருக்கிறார். அட்ரா சக்க.... ஆமா, சூப்பர் ஸ்டார் குடும்பம் மட்டும் ஏன் சைலண்டா இருக்கு....?
நயன்தாராவின் மௌனம் கலையுமா?
நயன்தாராவை மீண்டும் நடிக்க கேட்டு நடிகர்கள், இயக்குநர்கள் வற்புறுத்தி வருகின்றனர். பிரபுதேவாவை விரைவில் மணக்க திட்டமிட்டுள்ள நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு போட்டார். தமிழில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் கடைசியாக நடித்த நயன்தாரா தெலுங்கில் 'ஸ்ரீராமராஜ்ஜியம்' என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். அதன்பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. பிரபுதேவா இந்தி படம் இயக்குவதில் பிஸியாகி விட்டார். இருவரின் திருமணம் எப்போது நடக்கும் என்று அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், நயன்தாராவை மீண்டும் நடிக்க கேட்டு திரையுலகினர் வற்புறுத்தி வருகின்றனர். இயக்குநர் லிங்குசாமி, வெங்கட் பிரபு, ராஜேஷ், ஏஎல்.விஜய் ஆகியோர் தங்களது படங்களில் நடிக்க கேட்டனர். அதை நயன்தாரா ஏற்கவில்லை. இதற்கிடையில் தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் அவரது கால்ஷீட் பெற முயன்று வருகின்றனர். தாசரி நாராயணராவ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகர் நாகார்ஜுனா ஆகியோர், 'நயன்தாரா மீண்டும் நடிக்க வரவேண்டும்' என்ற பகிரங்கமாக கூறி வருகின்றனர். 'மீண்டும் நடிப்பீர்களா?' என்று கேட்டால், மௌனத்தையே பதிலாக தருகிறார் நயன்தாரா. மௌனம் கலையுமானு பொறுத்திருந்து பாப்போம்!
'முகமூடி' பட்ஜெட்டால் கலங்கும் மிஷ்கின் ..
'நந்தலாலா' படத்தையடுத்து மிஷ்கின் இயக்கி வரும் படம் 'முகமூடி'. இப்படத்தை முதல் காப்பி அடிப்படையில் படமாக்கி வருகிறார் அவர். போடப்பட்ட பட்ஜெட்டை விட பெரிய அளவிலான படம் என்பதால் போட்ட பட்ஜெட்டை தாண்டி எகிறிக்கொண்டு போகிறதாம். இதனால் தினம் தினம் ஆகும் செலவைப்பார்த்து கலங்கி நிற்கிறார் மிஷ்கின். இதனால் பல ஹாலிவுட் கலைஞர்களை கொண்டு வர திட்டமிட்டிருந்த அவர், ஓரிருவரை மட்டுமே அங்கிருந்து வரவழைக்கிறாராம். அதோடு பிரம்மாண்டமாக எடுக்க நினைத்திருந்த பல காட்சிகளை சாதாரணமாக எடுத்து பட்ஜெட்டை சுருக்கி வருகிறார் மிஷ்கின். அடி வாசிச்சாத்தான அடுத்து வாசிக்கமுடியும்.....
குழந்தை நட்சத்திரங்களாக மின்னியவர்களின் கதை தெரியுமா?

அதேமாதிரிதான் நான் இயக்கிய 'கனிமுத்து பாப்பா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக மின்னிய ஸ்ரீதேவியை பார்த்துக்கொண்டு, அவரிடம் வேலை வாங்கிய அவரது தாயார் ராஜேஸ்வரியம்மா. அதுபோல 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் கிட்டத்தட்ட ரஜினி மகளாகவே வந்து போன மீனா, அவருடன் 'எஜமான்' படத்தில் அவருக்கே ஜோடியாகவும் நடித்தார். மீனாவுக்கும் அவரது தாயார் ராஜமல்லிகா பெரும் உதவியாக இருந்தார். இதுதான் கமல், ஸ்ரீதேவி, மீனா ஆகியோர் குழந்தை நட்சத்திரமாக இருந்து இப்போது பெரிய நடிகர்களாக ஜொலித்தற்கு காரணமாக அமைந்தது.
இங்கு தாயுள்ளத்துடன் 85 குழந்தைகள் நடனம், அதுவும் பரதம் ஆட காரணமாக இருப்பவர் நிருத்திய தர்ஷன் டான்ஸ் அகடாமியின் குரு உஷா நாகராஜூ. மறைந்த நடனக் கலைஞர் சுந்தரம் அவர்களின் பேத்தியான உஷா நாகராஜூ, கடந்த 13 வருடங்களாக இப்படி ஒரு நடனப்பள்ளியை தொடங்கி பிரமாதமாக நடத்தி வருவதுடன் இதுமாதிரி குழந்தைகள் நடன நாட்டிய நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தி வருவதால், பெற்றோர்களான நாமெல்லாம் பிள்ளைகளை அவரிடமே விட்டுவிட்டு நடனம் பயில செய்ய வேண்டும் என்பது என் எண்ணம்! இதுமாதிரி குழந்தைகளுக்கு கல்வி மட்டுமல்லாது அதையும் தாண்டி நடனம், பாட்டு போன்ற பிற கலைகளிலும் ஆர்வம் காட்ட பெற்றோர்கள் உதவினால் அவர்கள் தப்பான வழிகளுக்கு போகும் எண்ணமே வராது. இங்கு ஆடிய குழந்தைகள் அனைவரும் தாளம் தப்பாமல், பிரமாதமாக பரதநாட்டியம் ஆடியதற்கு காரணமான உஷா மற்றும் அவரது நடன பள்ளி ஆசிரியர்களுக்கும் என் பாராட்டுக்கள் என்றெல்லாம் பேசியவர் பழம்பெரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.
சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்ற, அதுவும் மார்கழி இசை-நாட்டிய விழாவாக நடைபெற்ற இவ்விழாவில் காமராஜ் மற்றும் முதல்வர் மகாத்மா படங்களில் காந்தியாக நடித்திருக்கும் காந்தி கனகராஜ்! உரத்த சிந்தனை ஆசிரியர் உதயன்ராம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு நிருத்திய தர்ஷன் டான்ஸ் அகடாமியின் 12-வது ஜூனியர் ஆண்டு விழாவில் ஆடிய குழந்தைகளை வாழ்த்தி பரிசளித்தனர். விழாவின் இறுதியின் உஷா நாகராஜூ நன்றி கூறினார். இன்னும் ஜொலிக்க வேண்டிய நட்சத்திரங்கள் எத்தனை எத்தனையோ.....?
விஜய்ய பிடிக்காதவங்களுக்குகூட 'நண்பன்' பிடிக்கும்: ஷங்கர்..
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'நண்பன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். ஜெமினி நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற 'த்ரி இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக் இந்த 'நண்பன்'. இதுவரை கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்து வந்த விஜய் இப்படத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். முதன் முதலாக ஷங்கர் - விஜய் இணைந்து இருக்கிறார்கள். முதலில் படத்தின் நாயகனாக சூர்யா நடிக்கப் போவதாக பேச்சு இருந்தது. இறுதியில் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2011-ம் ஆண்டே இப்படம் முடிவடைந்தாலும் 'வேலாயுதம்' படம் தாமதமானதால் 2012-ல் முதல் விஜய் படமாக 'நண்பன்' இன்று வெளியாகி இருக்கிறது.
இப்படம் குறித்து ஷங்கர், 'எந்திரன்' ஷூட்டிங்கிங் பரபர டென்ஷனுக்கு இடையில்தான் 'த்ரி இடியட்ஸ்' படம் பார்த்தேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போய் பார்த்த படம், ஸ“னுக்கு ஸ“ன் அப்படியே மெஸ்மரிசம் பண்ணிருச்சு. 'எந்திரன்' மாதிரி ஒரு படம் பண்ணிட்டு, அதுக்குச் சம்பந்தமே இல்லாமல்.. வேறு கலரில், யூத் வெர்ஷனில் ஒரு படம் பண்ண நினைச்சிருந்தேன். இப்போ படத்தை பார்க்கிறப்போ, 'த்ரி இடியட்ஸ்' படத்தை நான் ரீ-மேக் பண்ண எடுத்த முடிவு சரின்னு தோணுது! விஜய்யை எல்லாருக்கும் பிடிக்கும்.. இந்த படத்துக்கப்பறம் அவரை பிடிக்காதவங்க யாராவது இருந்தாலும், அவங்களுக்கும் விஜய்யை பிடிக்கும்" என்று தெரிவித்துள்ளார். படத்தின் விஜய்யின் பெயர் பஞ்சவன் பாரிவேலு, ஜீவாவின் பெயர் சேவற்கொடி செந்தில், ஸ்ரீகாந்தின் பெயர் வெங்கட்ராம கிருஷ்ணன், இலியானாவின் பெயர் ரியா, சத்யராஜின் பெயர் விருமாண்டி சந்தனம். படத்தின் முதல் TEASER வெளியான போது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியது. படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று இருப்பது கூடுதல் பலம்.
இப்படம் குறித்து விஜய் "நான் பிறந்தது சென்னைன்னாலும் கோயம்புத்தூர் பாஷை எனக்கு நல்லா வருதுங்ணா..! ஷங்கர் ஒரு அற்புதமான மனிதர். அவரை இந்தியாவோட ஸ்பீல்பெர்க்ன்னு சொல்லலாம்! இந்த படத்துல ஸ்ரீகாந்த் ரொம்ப நல்லா நடிச்சிருக்கார். ஷூட்டிங் ஸ்பாட் கலகலன்னு இருக்க வெக்கறது ஜீவா அண்ணன் தான்..! எல்லாரும் டயலாக் எல்லாம் பாத்துகிட்டு சீன் எடுக்க தயாரா இருக்கும்போது, எதையாவது சொல்லி சிரிக்க வெச்சிடுவார்.. செய்யறதை செஞ்சிட்டு அவர் பாட்டுக்கு நடிப்புல கவனமா இருப்பார்.. எனக்கு நடிக்கும்போது சிரிப்பு வந்துடும்.. 'நண்பன்' பட ஷூட்டிங்ல ஜீவா என்னுடைய நல்ல நண்பன் ஆகிட்டார்.. இந்த படத்தின் மூலமா எனக்கு நல்ல நண்பர்கள் கிடைச்சது ரொம்ப சந்தோஷம்.. படத்துல எல்லா பாட்டுமே நல்லா வந்திருக்கு!" என்று பேசினார்.. பாடல் வெளியீட்டு விழா அன்று வெளியிடப்பட்ட தியேட்டர் டிரெய்லரில் விஜய் பேசியதாவது, ஏ.ஆர்.ரஹ்மான் கிட்ட அவர் அப்பா நீ பெரிய கிரிக்கெட் வீரன் ஆகணும்னு சொல்லி இருந்தாலும், சச்சின் கிட்ட அவங்கப்பா நீ பெரிய இசையமைப்பாளரா வரணும்னு சொல்லி இருந்தாலும் என்ன நடந்து இருக்கும் சொல்லு" என்ற வசனம் போடப்பட்டபோது ரசிகர்கள் அதனை வெகுவாக ரசித்தனர். 'நண்பன்' இன்று 12-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் முன்பதிவு ஆரம்பமான சிறிது நேரத்தில் முக்கிய திரையரங்குகள் அனைத்திலும் முதல் 2 நாட்களுக்கான டிக்கெட் விற்பனை சில மணித்துளிகளில் முடிவுற்றது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தின் வீரப்போர் கதையை சொல்லும் 'தேன்கூடு'!
ஈழத்தின் வீரப் போர் கதையை முதல் முறையாக ஒரு படத்தில் பதிவு செய்துள்ளனர் தமிழ்ப் படைப்பாளிகள். இத் திரைப்படத்தில் நாயகனாக கனடா வாழ் ஈழத்தமிழரும் கனடாவில் எடுக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த்திரைப்படமான '1999' நாயகருமான சுதன் மகாலிங்கம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் நாயகியாக நவீனா என்பவர் நடித்துள்ளார். படத்தின் இயக்குநர் இகோர் இதற்கு முன் தமிழில் ஆர்யாவை வைத்து 'கலாபக்காதலன்' படத்தைக் கொடுத்தவர். 'தேன்கூடு' படத்தினை இலெமூரியா சர்வதேச திரைப்பட நிறுவனம் தயாரிக்க பிளசிங் எண்டர்டெய்னர்ஸ் பிரபாதித் சாமுவேல் வழங்குகிறார். 1984-ல் இலங்கை திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள தென்னமரவாடி என்ற பசுமை நிறைந்த தமிழ் கிராமம் சிங்கள வெறியர்களால் சூறையாடப்படுகிறது. அந்த கிராம அழிவிலிருந்து ஒரு ஈழ விருட்சம் வீரமாய் துளிர்விடுகிறது. அதன் போராட்டக் கதை 2009 முள்ளிவாய்க்கால் வரை தொடர்கிறது. முடிவே வரலாறு... இல்லை அது முடியாத வரலாறு, என்பதுதான் படத்தின் அடிநாதம். இலங்கை வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்ட ஒரு தமிழீழக் கிராமத்தை 'தேன்கூடு' திரைப்படத்தில் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்களாம். தமிழீழ மக்கள் மண்ணை விட்டுதான் போகிறார்கள்.. மண் அவர்களை விட்டுப்போகாது.. ஆண்ட தமிழினம் மீண்டும் ஆளும்... மனிதர்கள் மடியலாம்.. மண் மடியாது! இதை 'தேன்கூடு' உணர்த்தும் என்கிறார்கள் லெமூரியா படக்குழுவினர். பிப்ரவரியில் உலகமெங்கும் வெளிவருகிறது 'தேன் கூடு'.
அதிர்ச்சி ஹீரோயின் புலம்பும் ஹீரோ ..
தல படத்துல அவர் ஜோடியா நடிக்க வாய்ப்பு வரப்போகுதுன்னு அமல ஹீரோயின் குஷியில இருந்தாராம்... ஆனா தல படத்தை
இயக்கற விஷ்ணுவான இயக்கம், ‘படத்துக்கு ஹீரோயினை இன்னும் முடிவு பண்ணல. பெரிய ஹீரோயின்கள்கிட்ட பேச்சு நடத்துறேன்’னு சொல்றாராம்... இயக்கத்தோட ஸ்டேட்மென்ட்டை கேட்டு அமல ஹீரோயின் அதிர்ச்சியில இருக்காராம்... இருக்காராம்...
வெற்றியான இயக்கம் தன்னோட நார்த் மெட்ராஸ் படத்துக்கு ரிகர்சல் பண்ண பிளான் பண்ணினாராம்... பண்ணினாராம்... ஆனா படத்துல நடிக்கற ஹீரோ, வில்லன் எல்லாமே பிஸியா இருக்கறதால சொன்ன நேரத்துல ரிகர்சல் நடத்த முடியலையாம்... அதனால ரிகர்சல் பிளானை இயக்கம் தள்ளிப்போட்டுட்டாராம்... அடுத்த முறையும் இதே நிலைமை வந்தா, ரிகர்சல் திட்டத்தையே டிராப் பண்ற ஐடியாவுல இருக்காராம்... இயக்கம் இருக்காராம்...
அரசனை குறிக்கும் ஒற்றையெழுத்து படத்துல வில்லனா நடிச்ச அஜ்ஜான மல்லு நடிகரு அப்செட்ல இருக்காராம்... இருக்காராம்... படம் ஹிட்டானதுல நிறைய சான்ஸ் வரும்ன்னு காத்திருந்தாராம்... அப்படி எதுவும் நடக்கலையாம்... யாருமே அப்ரோச் பண்ணாததால கோபத்துல இருக்காராம்... ‘இத்தனை படத்துல நடிச்சாச்சு. இன்னும் இயக்கங்களுக்கு என் மேல நம்பிக்கை வரலையே’ன்னு ஃபிரன்ட்ஸுங்ககிட்ட சொல்லி புலம்பராறாம்... புலம்பராறாம்...
ஹீரோவை தடுக்கும் சபதம் ஹீரோயின் பில்டப் முடிவு ..

இதனால புதிய படங்கள்ல கமிட் ஆக முடியாம நடிகரு இருக்காராம். வில்லனா நடிக்க நிறைய வாய்ப்பு வருதாம். ஆனா ‘ஹீரோவாதான் நடிப்பேன்Õனு போட்ட சபதம் தடுக்குதாம்... நடிகரை தடுக்குதாம்... ‘இப்போல்லாம் ஹீரோக்களே நெகடிவ் கேரக்டர்ல நடிக்கத்தான் பிரியப்படுறாங்க. உங்க சபதத்தை மறந்துட்டு வர்ற படங்கள¢ல நடிக்க¤றதுதான் பியூச்சருக்கு கைகொடுக்கும்Õனு கூட இருக் கிறவங்க அட்வைஸ் பண்றாங்களாம்... பண்றாங்களாம்...
கோலிவுட்காரங்க மல்லுவுட் ஹீரோயின்களை வளைச்சி வளைச்சி படங்களுக்கு புக் பண்றாங்களாம்... பண்றாங் களாம்... இதனால மல்லுவுட்காரங்க தங்களோட பார்வையை சான்டல்வுட் பக்கம் திருப்பிட்டாங் களாம். அங்கிருக்கும் புது ஹீரோயின்களை புக் பண்ண ஆர்வம் காட்டுறாங்களாம். லால் படத்துக்கு பெங்களூர் நடிகை சஞ்சனாவை ஒப்பந்தம் பண்ணியிருக்காங்களாம். அதபோல¢ மூட்டி நடிகருக்கும் பெங் களூர்ல ஹீரோயின் தேடுறாங்களாம்... தேடுறாங்களாம்...
ராஜமான பாட்டை படத்துல ஒரு பாட்டுக்கு ஆட்டம்போட்ட சலோனியான நடிகை புது முடிவுக்கு வந்துட்டாராம்... வந்துட்டாராம்... ‘இனிமே எந்த மொழியா இருந்தாலும் ஒரு பாட்டுக்கு டான்ஸ¢ ஆடுறதில்லை. நல்ல கேரக்டரா இருந்தா மட்டுமே நடிக்க¤றதுÕன்னு முடிவு பண்ணிருக்காராம். Ôதிரும்ப ஹீரோயின் வாய்ப்பை பிடிக்கவே இப்படி சொல்றாரு. வாய்ப்பு வரலேன்னா, ஒரு பாட்டு சான்ஸ் கிடைச்சா தொடர்ந்து அப்படி நடிப்பாருÕன்னு அவரோட நெருக்கமானவங்களே சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...
அசின், த்ரிஷா, கரீனா யார் சிறந்த நடிகை? : ரசிகர்கள் பந்தயம் .
அசின், த்ரிஷா, கரீனா கபூர் ஆகிய மூவரில் யார் சிறந்த நடிகை என்று தெலுங்கு ரசிகர்களுக்கு இடையே போட்டி எழுந்துள்ளது. மலையாளத்தில் உருவான படம் ‘பாடி கார்ட்’. இப்படத்தை சித்திக்
இயக்கி இருந்தார். கடந்த ஆண்டு இப்படம் விஜய், அசின் நடிக்க தமிழில் ரீமேக் ஆனது. இதையடுத்து சல்மான்கான்-கரீனாகபூர் நடிக்க இந்தியில் உருவானது.
இதையடுத்து வெங்கடேஷ், த்ரிஷா நடிக்க தெலுங்கில் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே தமிழ், இந்தியில் இப்படம் வெளியாகிவிட்டது. பொங்கல் தினத்தில் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து ரசிகர்களிடையேயும், திரையுலகினர் மத்தியிலும் இப்படம்பற்றி பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது.
தமிழ், இந்தியில் வெற்றி அடைந்ததுபோல் தெலுங்கிலும் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தில் நடித்திருக்கும் ஹீரோயின்கள் அசின், த்ரிஷா, கரீனா கபூர் மூவரில் யார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்று பரபரப்பான பேச்சு எழுந்துள்ளது.
ஆந்திரா ரசிகர்களுக்கிடையே இந்த பேச்சு பந்தயத்தில் போய் முடிந்திருக்கிறது. இதற்கிடையில் இசை அமைப்பாளர் தமன் தெலுங்கு ‘பாடி கார்ட் படத்தில் த்ரிஷாவின் நடிப்பு சூப்பர்’ என்று பேட்டி அளித்திருக்கிறார்.
சொன்னபடி கதையை எடுப்பதில்லை : பிரியாமணி தாக்கு ..
‘சொன்னபடி கதைகளை எடுக்காததால் பல படங்கள் தோல்வி அடைகின்றன’ என்றார் பிரியாமணி. இதுபற்றி அவர்
கூறியதாவது: கன்னடத்தில் நடித்த விஷ்ணுவர்தனா பட வெற்றி விழாவில் என்னால் பங்கேற்க முடியவில்லை. தெலுங்கில் ‘ஷேத்ரம்’ படம் வெளியானது.
இப்படத்தில் நான் நடித்தது பற்றி விமர்சிக்கிறார்கள். ஆனால் எனக்கு வரும் எஸ்எம்எஸ், போன்களில் என் நடிப்பு பிடித்திருப்பதாக ரசிகர்கள் சொல்கின்றனர். படத்தின் தோல்விக்கு சில காரணங்கள் இருக்கின்றன. பல இயக்குனர்கள் ஸ்கிரிப்ட் சொல்லும்போது நன்றாக இருக்கிறது.
ஆனால் ஷூட்டிங்கின்போது பல காட்சிகளை மாற்றி விடுகிறார்கள். இதனால் எதிர்பார்த்தபடி படங்கள் வருவதில்லை. தோல்வி அடைகிறது. ஷூட்டிங் நடக்கும்போது முதலில் சொன்னபடி காட்சி இல்லையே என்று கேட்டால் அப்போதைக்கு அதை சரிசெய்கிறார்கள். நடித்துவிட்டு போகிறேன்.
ஆனால் எடிட்டிங் செய்யும்போது எப்படி மாறும் என்பதெல்லாம் என் கட்டுப்பாட்டில் கிடையாது. இப்போது கன்னட படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டில் நிறைய நல்ல படங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
திரைக்கதை தயாராயிட்டிருக்கு ! : விஷ்ணுவர்தன்
அஜீத் நடித்து இருக்கும் படம் 'பில்லா 2'. சக்ரி டொலெட்டி இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். பார்வதி ஒமணக்குட்டன் நாயகியாக நடித்து இருக்கிறார்.
’பில்லா 2’ படத்தில் மும்முரமாக நடித்து வந்ததால் அஜீத் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. பில்லா 2 படத்தில் அஜீத்தின் பணிகள் முடிந்த பின் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்றார்.
சிங்கப்பூரில் இருந்து திரும்பி இருக்கும் அஜீத், தற்போது விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க இருக்கிறார்.
அஜீத் நடிக்க இருக்கும் படத்தின் கதை என்ன, யார் எல்லாம் நடிக்கிறார்கள், அஜீத் எந்த மாதிரி பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பதை அறிய விஷ்ணுவர்தனிடன் பேசியதில், அவர் “அஜீத் சாரிடம் சொன்ன ஒரு வரி கதைக்கு திரைக்கதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் அப்பணிகள் முடியவில்லை. அப்பணிகள் எல்லாம் முடிந்தால் தான் அந்தந்த பாத்திரத்திற்கு யார் பொருந்துவார் தீர்மானிக்கப்படும் அதன் பிறகே அடுத்த கட்ட பணிகள் துவங்கும்.
அதற்குள் பல்வேறு விதமாக செய்திகள் உலா வருகின்றன. எதிலும் உண்மையில்லை. திரைக்கதை அமைக்கும் பணி இறுதிகட்டத்தில் இருக்கிறது. அது முடிந்தால் தான் மற்றவைகளில் கவனம் செலுத்துவோம்.” என்றார்.
அஜீத் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்றதற்கு " நீங்கள் எனது படத்தில் வித்தியாசமான தலயை பார்க்க இருக்கிறீர்கள் என்பது மட்டும் உறுதி " என்று சொல்லி தன் வழக்கமான் சிரிப்பால் ஃபினிஷிங் டச் கொடுத்தார்.
வேட்டையில் அஜித் & கோ !
முன்பெல்லாம் எம்ஜியார், ரஜினி நடித்த பழைய படங்களின் காட்சிகளை தங்களது படத்தில் இணைப்பார்கள். அவர்கள் திரையில் தோன்றியவுடன் ரசிகர்கள் விசிலடித்து கொண்டாடுவார்கள். இப்போது ஒரு படி மேலே போய், மிக சமீபத்தில் வந்து வரவேற்பைப் பெற்ற படங்களின் காட்சிகளைப் பயன்படுத்தி ரசிகர்களை கவர்வது இப்போது துவங்கியுள்ளது.
மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடித்து வெளிவந்து இருக்கும் படம் 'வேட்டை'. லிங்குசாமி இயக்கி தயாரித்து இருக்கிறார். யு.டிவி நிறுவனம் இப்படத்தினை வெளியிட்டு நன்றாக விளம்பரப்படுத்தி வருகிறது.
இப்படத்தில் வரும் சில காட்சிகளில் தேவைக்காக அஜீத் நடித்த ’மங்காத்தா’ மற்றும் ஜீவா நடித்த ’கோ’ படத்தில் இருந்தும் சில காட்சிகளை சேர்த்து இருக்கிறார்களாம்.
இதுகுறித்து யு.டிவி தனஞ்செயன் தனது டிவிட்டர் இணையத்தில் " ’வேட்டை’யில் தல அஜீத்தின் மங்காத்தா மற்றும் கே.வி.ஆனந்தின் ’கோ’ ஆகிய படங்களில் இருந்து சில காட்சிகளைப் பயன்படுத்தியுள்ளோம். பார்த்து மகிழுங்கள்” என தெரிவித்துள்ளார்.
Friday, January 13, 2012
சமந்தாவுக்கு அடிக்குது அதிர்ஷ்டம்!! நிராகரித்த மணிரத்னம் வாய்ப்பு தருகிறார்!
‘ராவணன்’ படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு வந்த சமந்தாவை நிராகரித்த மணிரத்னம் தெலுங்கில் அவர் பிரபலமானதால் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
விக்ரம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் நடித்த ‘ராணவன்’ படத்தை மணிரத்னம் இயக்கினார். அடுத்து ‘பூக்கடை’ என்ற படத்தை இயக்குகிறார்.
‘அலைகள் ஓய்வதில்லை’ ஜோடிகளான கார்த்திக் - ராதாவின் வாரிசுகளை இதில் நடிக்க வைக்க மணிரத்னம் விரும்பினார். கார்த்திக் மகன் கவுதம் ஹீரோ என முடிவானது.
ஆனால், ராதா மகள் துளசி ஓகே ஆகவில்லை. இதற்கிடையில் கமல்ஹாசனின் 2-வது மகள் அக்ஷரா, பார்த்திபன் மகள் கீர்த்தனா, பாலிவுட் நடிகை சோனம் கபூர் ஆகியோரில் ஒருவரை ஹீரோயினாக நடிக்க வைப்பதுபற்றி ஆலோசித்து வந்தார். இந்நிலையில் நடிகை சமந்தாவை ஹீரோயினாக தேர்வு செய்திருக்கிறார் மணிரத்னம்.
சமந்தா நடிக்க வந்த புதிதில் ‘ராவணன்’ படத்தை இயக்கிக்கொண்டிருந்தார் மணிரத்னம். அதில் சமந்தா வாய்ப்பு கேட்டார். இதற்காக போட்டோஷூட் நடத்திய பிறகு, சமந்தாவை மணிரத்னம் நிராகரித்தார்.
அதன் பிறகு, தெலுங்கு படத்தில் நடித்தார் சமந்தா. ‘தூக்குடு’ என்ற படம் சூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து சமந்தாவுக்கு மவுசு அதிகரித்தது.
இதையடுத்து ‘பூக்கடை’ படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் மணிரத்னம். ‘நிராகரித்தவரே மீண்டும் அழைப்பு தந்திருக்கிறார். சினிமாவில் முன்னேற அதிர்ஷ்டம் முக்கியம். சமந்தாவுக்கு அதிர்ஷ்டம் சூப்பராக அடிக்கிறது’ என்கிறது கோலிவுட் வட்டாரம்.
மீண்டும் நடிக்குமாறு நயன்தாராவை வற்புறுத்தும் பிரபலங்கள்!!

தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் கடைசியாக நடித்த நயன்தாரா தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்யம் என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்தார்.
அதன்பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. பிரபுதேவா இந்தி படம் இயக்குவதில் பிஸியாகி விட்டார். இருவரின் திருமணம் எப்போது நடக்கும் என்று அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், நயன்தாராவை மீண்டும் நடிக்க கேட்டு திரையுலகினர் வற்புறுத்தி வருகின்றனர்.
இயக்குனர் லிங்குசாமி, வெங்கட் பிரபு, ராஜேஷ், ஏஎல்.விஜய் ஆகியோர் தங்களது படங்களில் நடிக்க கேட்டனர். அதை நயன்தாரா ஏற்கவில்லை.
இதற்கிடையில் தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் அவரது கால்ஷீட் பெற முயன்று வருகின்றனர். தாசரி நாராயணராவ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகர் நாகார்ஜுனா ஆகியோர், நயன்தாரா மீண்டும் நடிக்க வரவேண்டும் என்ற பகிரங்கமாக கூறி வருகின்றனர். மீண்டும் நடிப்பீர்களா? என்று கேட்டால், மவுனத்தையே பதிலாக தருகிறார் நயன்தாரா.
மேக்கப் வேண்டாம்... சொல்லியும் கேட்காத ஓவியா!!
காற்றுக்கும் ஹேர் டிரஸ்சருக்கும் நடக்கும் போராட்டத்தை கவனித்தால், ஐயோ பாவம்டா இந்த பொழப்பு என்றே தோன்றும். லேசாக முடி கலைந்தால் கூட ஓடி வந்து தலை சீவிவிடும் ‘பேட்டா’ அம்மாக்கள்தான் இவர்கள். அதுவும் காற்று வந்து கலைத்துக் கொண்டேயிருக்கும் மெரீனா பீச்சில் ஷுட்டிங் வைத்தால் என்னாகும்?
மெரீனா படப்பிடிப்பில் ஓவியாவின் மேக்கப்பே ‘தனி தெலுங்கானா’ ரேஞ்சுக்கு பிரச்சனையை கிளப்பிவிட்டதாம். அந்த வயிற்றெரிச்சலை நம்மோடு பகிர்ந்து கொண்டார் படத்தின் டைரக்டர் பாண்டிராஜ்.
என் படத்தின் ஹீரோயின்கள் மேக்கப் போட்டால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. சுனைனாவும் அப்படிதான் மேக்கப் இல்லாமல் நடித்தார். பசங்க-வில் வேகாவும் அப்படிதான். அதே மாதிரி இந்த படத்திற்கும் மேக்கப் தேவையில்லைன்னு ஓவியாவிடம் சொல்லிட்டேன். முதல் ரெண்டு நாள் ஷுட்டிங் போச்சு.
கடல் காற்று. அடிக்கிற வெயில். ரெண்டையும் பொறுத்துக் கொள்ள முடியாத ஓவியா மூணாவது நாளே மேக்கப்போடு வர ஆரம்பிச்சுட்டாங்க. நானும் போகட்டும்னு விட்டுட்டேன் என்றவர், அந்த பிரஸ்மீட்டை ஒரு நன்றி அறிவிப்பு கூட்டமாகவே நடத்தி முடித்துவிட்டார்.
இந்த படத்தின் பிரமோஷனுக்காக ஒரு பாடல் எடுக்கணும்னு ஆசைப்பட்டேன். சசிகுமார், அமீர் சார் ரெண்டு பேரும் நான் கூப்பிட்டவுடனே வந்து நடிச்சு கொடுத்தாங்க.
எனக்கு பெரிய அளவுக்கு பழக்கம் இல்லாத சினேகா, விக்ரம் ரெண்டு பேரும் வந்ததுதான் இன்னும் பெரிய சந்தோஷத்தை கொடுத்துச்சு. அதிலும் ராஜபாட்டை ரிலீஸ் டென்ஷனில் இருந்த விக்ரம், அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடிச்சு கொடுத்தார் என்றார் மிக்க எமோஷனலோடு.
அவ்வளவு சந்தோஷத்திலும் ஒரு வருத்தம் பாண்டிராஜுக்கு. மெரீனா படத்தின் தயாரிப்பாளரே சசிகுமார்தான்னு வெளியில் பேசிக்கிறாங்க. உண்மை அதுவல்ல என்றார்.
தன்னம்பிக்கை சூப்பை தாய் பாலா நினைச்சு குடிக்கிற இயக்குனர்களில் முதன்மையானவர் டி.ராஜேந்தர் என்றால், பாண்டிராஜ் அவருக்கு கொஞ்சமும் சளைத்தவரல்ல. உழைப்பால் முன்னுக்கு வந்த இவரை இன்னொருவரின் பினாமி என்றால் வருத்தாமல் வேறென்ன செய்வாராம்?http://www.therealfun.com/Innocent-Hot-Girl-Face-HD-14709/
2011-ல் வரவேற்பை பெற்ற படங்கள்..
தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் சிறந்த வருடமாக கருதப்படுகிறது. 2011 ஆண்டு வெளியான படங்களில் எது எல்லாம் மக்களிடமும், திரைப்பட விமர்சகர்களிடமும் வரவேற்பை பெற்றன என்பது குறித்து ஒரு பார்வை :
ஆடுகளம் : தனுஷின் எதார்த்தமான நடிப்பு, வெற்றிமாறனின் சிறப்பான திரைக்கதை அமைப்பு என இரண்டும் ஒரு சேர கலந்ததால் மக்களிடமும், திரைப்பட விமர்சகர் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை ஆசிரியர், சிறந்த எடிட்டர் (T.E.கிஷோர் ) என இப்படத்திற்கு மூன்று தேசியவிருதுகளைக் கொடுத்து கெளரவித்தது மத்திய அரசு.
சிறுத்தை : 'விக்ரமாக்குடு' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக். போலீஸ் அதிகாரி, திருடன் என முதன் முறையாக கார்த்தி இருவேடங்களில் நடித்த படம். கார்த்தியின் நடிப்பு, சந்தானத்தின் காமெடி, வேகமான திரைக்கதை அமைப்பு ஒன்றிணைந்த படம். வரவேற்பு மற்றும் வசூல் என இரண்டிலும் தயாரிப்பாளருக்கு திருப்தி அளித்த படம்.
காவலன் : 'பாடிகார்ட்' மலையாள படத்தின் தமிழ் ரீமேக். கமர்ஷியல் படங்களிலேயே விஜய்யை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு சின்ன மாற்றம். நீண்ட நாட்கள்.. இல்லை.. நீண்ட மாதங்கள் கழித்து, கமர்ஷியல் மசாலாக்கள் குறைத்து, காமெடி கலந்த வேடத்தில் விஜய் நடித்த படம். பட வெளியீட்டிற்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டாலும் தடைகளை தாண்டி வெளிவந்து வரவேற்பை பெற்ற படம்.
பயணம் : விமானத்தை கடத்தியவர்களிடம் இருந்து பயணிகள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை சுவாரஸ்யத்துடன் சொன்ன திரைக்கதை. ஒரு ஹைஜாக் படத்தில் காமெடியை சரியான இடத்தில் கலந்தது ராதாமோகனின் டச். 'ரட்சகன்' படத்திற்குப் பிறகு நாகர்ஜுனா நடித்த தமிழ் படம்.
குள்ளநரி கூட்டம் : நான்கு இளைஞர்கள் எப்படி போலீஸ் அதிகாரிகள் ஆகிறார்கள் என்ற கதையை நகைச்சுவையுடன் சொன்ன படம். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்த படம். 'வெண்ணிலா கபடிக் குழு' படத்திற்குப் பிறகு விஷ்ணுவுக்கு அமைந்த வெற்றிப்படம்.
பொன்னர் சங்கர் : கலைஞரின் வசனம், தியாகராஜன் அருமையான இயக்கத்தில் வெளிவந்தது பொன்னர் சங்கர். கிராபிக்ஸ் காட்சிகளா என்பது தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள், பிரம்மாண்டமான தயாரிப்பு என இரண்டுமே அமைந்தது இப்படத்தின் ப்ளஸ். பிரஷாந்த் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த படம்.
கோ : கே.வி.ஆனந்த இயக்கத்தில் வெளியான படம். பத்திரிக்கை புகைப்பட கலைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்த படம். கே.வி.ஆனந்த, சுபா என மூவரின் திரைக்கதை அமைப்பு, கே.வி.ஆனந்தின் இயக்கம், ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் என மூன்றுமே மக்களிடம் வரவேற்பை பெற காரணமாக அமைந்தது.
வானம் : ' வேதம்' தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக். ஐந்து தனித்தனி கதைகள் ஒருகட்டத்தில் எல்லாம் ஒன்றாக இணைய, க்ளைமாக்ஸ் என்ற திரைக்கதை அமைப்பில் வெளிவந்த படம். ஐந்து கதைகளில் ஒரு கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்தது தான் இப்படத்தின் ஹைலைட்.
அழகர்சாமியின் குதிரை : பாஸ்கர் சக்தியின் சிறுகதையை படமாக வடிவமைத்து சுசீந்திரன் இயக்கிய படம். எதார்த்தமான பாத்திர படைப்புகள், திரைக்கதை அமைப்பு என திரைப்பட விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற படம்.
ஆரண்ய காண்டம் : ஒரு கேங்ஸ்டர் குரூப்பில் நடக்கிற சிலந்தி வலை சதிப் பின்னல்களே 'ஆரண்ய காண்டம்’. திரைக்கதை அமைப்பு, ஷார்ப்பான வசனங்கள் என திரைப்பட விமர்சகர்கள் பாராட்டிய படம். வெளிவரும் முன்னே பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை குவித்தது. யுவன் சங்கர் ராஜா அமைத்த பின்னணி இசை, வினோத் ஒளிப்பதிவு என அனைத்து தரப்பினரின் உழைப்பு தான் இப்படத்தின் விருதுகளுக்கு காரணம்.
தெய்வத்திருமகள் : அஞ்சு வயசுப் பெண்ணின் அப்பாவுக்கும் அஞ்சு வயசு என்றால் என்ன ஆகும் என்பதை அழகாக காட்டிய படம். விக்ரமின் நடிப்பு, குழந்தை நட்சத்திரம் சாராவின் மழலை கொஞ்சும் நடிப்பு என தமிழக மக்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய படம். ஜி.வி.பிரகாஷ் இசை, இயக்குனரின் விஜய்யின் நேர்த்தியான திரைக்கதை அமைப்பு இவ்விரண்டுமே இப்படத்திற்கு பலமாக அமைந்தது.
காஞ்சனா : தன் கனவைச் சிதைத்த வில்லன்களை லாரன்ஸின் உடலில் புகுந்து பழி தீர்க்கும் திருநங்கை ஆவி... 'காஞ்சனா’!. லாரன்ஸ் கதை, திரைக்கதை அமைப்பு, கோவை சரளா காமெடி என மக்களை ரசிக்க வைத்தப் படம். படம் பார்த்தவர்கள் ஒன்று, ஆவியைப் பார்த்துச் சிரிப்பார்கள். அல்லது திருநங்கைகளைப் பார்த்தால் மரியாதை கொடுப்பார்கள். இந்த இரண்டுமே 'காஞ்சனா’வுக்குக் கிடைத்த வெற்றிகள்!
வெங்காயம் : ஒரு கிராமத்தில் அருள்வாக்கு, ஜோசியம் சொல்லும் சாமியார்கள் வரிசையாகக் கடத்தப்படுகிறார்கள். சாமியார்களைக் கடத்தியவர்கள் யார், ஏன் கடத்தினார்கள், அவர்களை என்ன செய்தார்கள் என்னும் முடிச்சுகளை அடுத்தடுத்து உரிக்கிறது வெங்காயம். சமூக அக்கறையுடன் பகுத்தறிவுக் கதை சொன்ன விதத்தில் இந்த வெங்காயம்... காரம்தான்!
மங்காத்தா : கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங் பணம் 500 கோடியை, யார் அலேக் செய்வது என்ற தப்பாட்டமே 'மங்காத்தா’! 'தல ரசிகர்’களுக்காக 'தல ரசிகர்’களால் உருவாக்கப்பட்ட 'தல’ சினிமா!. அஜீத் 50வது படம், அஜீத்தின் வில்லத்தனமான நடிப்பு, வெங்கட்பிரபு திரைக்கதை அமைப்பு, யுவனின் இசை என தமிழக மக்களிடம் வரவேற்பையும் கல்லா நிறைய காசையும் அள்ளிக் கொடுத்த படம்.
எங்கேயும் எப்போதும் : எதிர்பாராத கணத்தில் நிகழும் ஒரு விபத்து, சிலரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் சிதைத்துக் குலைக்கிறது என்பதைச் சொல்லும் படம். இந்த இழப்பும் துயரமும் நம்மில் யாருக்கும் 'எங்கேயும் எப்போதும்’ நடக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்லி அதிரவைத்ததில், அறிமுக இயக்குநர் சரவணனுக்கு அடிக்கலாம் ஒரு வெல்கம் சல்யூட்! முதல் முறையாக ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளாராகவும் ஆனார்.
வாகை சூட வா : மின்சாரம், போக்குவரத்து வசதிகள் இல்லாத 1960-கள் காலகட்டம். 'கண்டெடுத்தான்காடு’ என்கிற கிராமம். செங்கல் சூளைக் கூலிவேலைதான் அங்கு பிழைப்பு. படிப்பறிவு இல்லாக் கூட்டத்தைக் கொத்தடிமைகளாக நடத்துகிறார் முதலாளி. அங்கு வாத்தியாராக வரும் விமல், குழந்தைகளைக் கல்விப் பாதைக்கு இழுக்க முயற்சிக்கிறார். அது உண்டாக்கும் சலசலப்பு கிராமத்துக்கே ஒரு விடியலை உண்டாக்குகிற கதை! 'களவாணி' சற்குணம் இயக்கி இருந்தார்.
சதுரங்கம் : நேர்மையான நிருபர் ஸ்ரீகாந்த் எழுதும் புலனாய்வுக் கட்டுரைகளால் அமைச்சர்கள், அதிகாரிகள், தாதாக்கள் எனப் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். ஸ்ரீகாந்த்தின் காதலி சோனியா அகர்வால் கடத்தப்படுகிறார். சோனியாவைக் கடத்தியது யார்? அவர் மீட்கப்பட்டாரா என்பதைப் பரபரப்பாக, விறுவிறுப்பாகச் சொல்கிறது 'சதுரங்கம்’. கரு.பழனியப்பன் இயக்கத்தில் படம் தயாராகி, பல மாதங்கள் கழித்தே வெளியானது இப்படம்.
ஏழாம் அறிவு : சீனத்தின் சிறப்புகளாக இன்று உலகமே கொண்டாடும் அரிய மருத்துவத்தையும் அதிரடித் தற்காப்புக் கலையையும் சீனர் களுக்குக் கற்றுக் கொடுத்தவன் ஒரு தமிழன் என்ற சரித்திரமே '7ஆம் அறிவு’ சொல்லும் செய்தி! ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை அமைப்பு, ரவி. கே.சந்திரனின் ஒளிப்பதிவு, சூர்யா மற்றும் JOHNNYயின் மிரட்டலான நடிப்பு என அனைத்துமே கலந்து மக்களிடம் வரவேற்பை பெற்ற படம். ஸ்ருதி ஹாசன் இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு நாயகியாக அறிமுகமானார்.
வேலாயுதம் : நகரத்தில் நடக் கும் அநீதியை அழிக்க, ஒரு பாசக்காரக் கிராமத்து அண்ணன் எடுக்கும் அவதாரமே வேலாயுதம்! விஜய் நடிப்பு, ஜெயம் ராஜாவின் திரைக்கதை, விஜய் ஆண்டனி இசை, சந்தானத்தின் காமெடி, என அனைத்து கலந்து மக்களிடன் வரவேற்பை பெற்ற படம்.
மயக்கம் என்ன : காதல், லட்சியம் இரண்டிலும் மனசு சொல்கிற திசையில் செல்லும் ஒருவன் கரை சேர்ந்தானா என்று சொல்லும் 'மயக்கம் என்ன’! செல்வராகவனின் திரைக்கதை, ராம்ஜியின் ஒளிப்பதிவு, தனுஷின் நடிப்பு, ஜி,வி.பிரகாஷின் துள்ளல் மிகுந்த பாடல்கள் என அனைத்தும் ஒருங்கே அமைந்து இளைஞர்கள் கொண்டாடிய படம்.
பாலை : வடக்கில் இருந்து வந்த கூட்டம் ஆயக்குடியைக் கைப்பற்றி, தமிழர்களைத் தாய் நிலத்தில் இருந்து துரத்துகிறது. அருகில் இருக்கும் நிலப்பரப்புக்கு முல்லைக்குடி என்று பெயர் சூட்டி, அங்கு வாழத் தொடங்கும் தமிழர்கள் பாலையின் பஞ்சத்தையும் எதிரிகளையும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் கதை!
போராளி : பகை தீர்க்கத் துரத்தும் மனித விலங்குகளிடம் இருந்து வாழ்க்கையைக் காப்பாற்றப் போராடும் 'போராளி’!. சமுத்திரக்கனியின் திரைக்கதை, சசிக்குமார் நடிப்பு மற்றும் தயாரிப்பு, கஞ்சாகருப்பு மற்றும் சூரியின் காமெடி என மக்களிடம் வரவேற்பை பெற்ற படம்.
மெளனகுரு : போலீஸ் நினைத்தால் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து, ஒரு சாதாரணனை என்ன பாடுபடுத்த முடியும் என்பதே மௌன குரு. ஒரு சாதாரணக் கதையை செம சஸ்பென்ஸ் த்ரில்லராக்கி கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் சாந்தகுமார். காவல் துறையின் கறுப்பு ஆடுகளைப் பதிவு செய்த அதே பாதையில், சின்சியர் அதிகாரிகளின் சிரமத்தையும் கச்சிதமாகச் சொன்ன விதத்துக்காக சாந்தகுமாருக்கு... ஒரு புன்னகைப் பூங்கொத்து!
2011 - மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள்..
எல்லா படங்களுமே உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஆனால், வெளியாகும் எல்லா படங்களுமே வெற்றி பெறுவதில்லை.
2011 -ல் திரைப்படம் வெளியாவதற்கு முன் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, வெளிவந்த பின் மக்களிடையே எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறத் தவறிய படங்கள் சில :
யுத்தம் செய் : வக்கிர தாகத்தைத் தணிக்க இளம் பெண்களை வேட்டையாடும் பெரும்புள்ளிகளுக்கு எதிராக உக்கிர 'யுத்தம் செய்’யும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தினரின் கதை! நீள நீளமான ஷாட்கள், கால்களில் கவனம் குவியும் கேமரா, தரையைப் பார்த்தே பேசும் ஹீரோக்கள், 15 பேராக இருந்தாலும் ரேஷன் அரிசி, பொங்கல் பரிசு போல வரிசையில் ஒவ்வொருவராக வந்து அடிவாங்கும் அடியாட்கள்... என 'மிஷ்கின் கிளிஷே’க்கள் இதிலும் அதிகம். பலவீனமான வியூகம் காரணமாக யுத்தச் சத்தம் மட்டுமே கேட்டது.
நடுநிசி நாய்கள் : சிம்பு - கெளதம் கூட்டணியில் வெளிவந்து தமிழக இளைஞர்கள் கொண்டாடிய 'விண்னைத்தாண்டி வருவாயா' படத்திற்கு பிறகு கெளதம் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு இடையே வந்த படம். பின்னணி இசையே இல்லாமல் வெளிவந்தது மட்டும் தான் இந்த படத்தின் ஹைலைட். பெண்களிடம் மிகுந்த எதிர்ப்பை சம்பாதித்ததால் தோல்வியுற்ற படம்.
சீடன் : திருடா திருடி படத்திற்கு பிறகு சுப்பிரமணிய சிவா - தனுஷ் இணைந்த படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் இக்காலத்தில் தனுஷை சாமியாக வைத்து கதைக்களம் இருந்ததால் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.
மாப்பிள்ளை : ரஜினி நடித்த மாப்பிள்ளை படத்தின் ரீமேக் என்ற எதிர்ப்பார்ப்புடன் வந்த படம். தனுஷ் நடிப்பில் சுராஜ் இயக்கிய படம் என்றாலும் மக்களிடம் வரவேற்பு பெறவில்லை. ஒரு பெருங்கூட்டத்தை நாயகன் அசால்ட்டாக அடிப்பது என்பது போன்ற விஷயங்கள் அதிகமாக இருந்ததால், படம் பார்க்கும் கூட்டத்தை கவரவில்லை.
எங்கேயும் காதல் : ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் வெளியானதில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஜெயம் ரவி நடிக்க பிரபுதேவா இயக்கி இருந்தார். தொய்வான திரைக்கதை அமைப்பு என்பதால் வரவேற்பு இல்லை.
வேங்கை : 'சிங்கம்' பெற்ற வரவேற்பை அடுத்து ஹரி இயக்கத்தில் தனுஷ் நடித்த படம். படத்தின் அடுத்த அடுத்த காட்சி என்ன, வசனம் என்ன, பாடல் எப்போது வரும் என படம் பார்த்தவர்கள் யூகிக்க கூடிய அளவுக்கு காட்சிகள் இருந்ததால்.. இந்த முறை ஹரி.. ரொம்ப் ஸாரி !
ரெளத்திரம் : 'கோ' என்ற வரவேற்பு பெற்ற படத்தினை அடுத்து ஜீவா நடிப்பில் வெளியான படம். வில்லன் பில்டப் ஓவராக வைத்து இறுதியில் வில்லன் யார் என்பதை காட்டும் போது மக்களிடையே சிரிப்பை வரவழைத்த படம். திரைக்கதையில் கவனமின்மையால் மக்களிடையே கவனிக்கப்படாமல் போனது.
வந்தான் வென்றான் : ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை ஆகிய படங்களை தொடர்ந்து கண்ணன் இயக்கத்தில் ஜீவா நடித்த படம். படம் பார்த்தவர்களைக் கவரும் அம்சங்கள் குறைவாக இருந்ததால், வசூலும் குறைவாகவே இருந்தது.
வெடி : தெலுங்கில் ஹிட் அடித்த 'சௌர்யம்’ படத்தை சௌகர்யமாகக் தமிழில் கடத்திய படம். விஷாலின் கேரக்டரில் எந்தப் புதுமையும் இல்லை. 'அவன் இவன்' விஷாலைப் பார்த்துவிட்டு ஆசையாக வெடி பார்க்கப் போன மக்களுக்கு ஏமாற்றம்.
வித்தகன் : டான் அவதாரம் எடுத்து சமூக விரோதிகளை வேட்டையாடும் போலீஸ் 'வித்தகன்’!. போதைப் பொருள் கடத்தல்காரர்களை அரசாங்கம் விடுவிப்பது எப்படி மிலிந்த் சோமனுக்குத் தெரியாமல்போகிறது? அவர்கள் எப்படி பார்த்திபனின் கஸ்டடிக்கு வருகிறார்கள்? அந்தக் கடத்தல்காரர்களின் பாஸ் யார்? என்று எக்கச்சக்க கேள்விகளால்... விளையாட்டுத் துப்பாக்கி ஆகிவிட்டது வித்தகனின் கன்!
ஒஸ்தி :'நான் கண்ணாடி மாதிரிலே’ என நல்லவனுக்கு நல்லவனும் கெட்டவனுக்குக் கெட்டவனுமான அதிரடி அடிதடி 'ஒஸ்தி’ போலீஸ் கதை! இந்த வருட கோட்டாவுக்குத் தமிழ் சினிமாவின் 'போலீஸ் ஸ்டோரி’!. படத்தில் எல்லாரும் பக்கம் பக்கமாகப் பேசித் தீர்க்கிறார்கள். வெளியே வந்த பிறகுதான் தெரிகிறது... உலகம் இவ்வளவு அமைதியானதா என்று?
ராஜபாட்டை :சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த கமர்ஷியல் படம். சரியான கூட்டணி.. ஆனால் தேர்ந்தெடுத்த கமர்ஷியல் கதை தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. விக்ரமிற்கும் சரி, சுசீந்திரனுக்கும் சரி இது நிஜமான 'ராஜபாட்டை' இல்லை.
2011 -ல் திரைப்படம் வெளியாவதற்கு முன் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, வெளிவந்த பின் மக்களிடையே எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறத் தவறிய படங்கள் சில :
யுத்தம் செய் : வக்கிர தாகத்தைத் தணிக்க இளம் பெண்களை வேட்டையாடும் பெரும்புள்ளிகளுக்கு எதிராக உக்கிர 'யுத்தம் செய்’யும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தினரின் கதை! நீள நீளமான ஷாட்கள், கால்களில் கவனம் குவியும் கேமரா, தரையைப் பார்த்தே பேசும் ஹீரோக்கள், 15 பேராக இருந்தாலும் ரேஷன் அரிசி, பொங்கல் பரிசு போல வரிசையில் ஒவ்வொருவராக வந்து அடிவாங்கும் அடியாட்கள்... என 'மிஷ்கின் கிளிஷே’க்கள் இதிலும் அதிகம். பலவீனமான வியூகம் காரணமாக யுத்தச் சத்தம் மட்டுமே கேட்டது.
நடுநிசி நாய்கள் : சிம்பு - கெளதம் கூட்டணியில் வெளிவந்து தமிழக இளைஞர்கள் கொண்டாடிய 'விண்னைத்தாண்டி வருவாயா' படத்திற்கு பிறகு கெளதம் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு இடையே வந்த படம். பின்னணி இசையே இல்லாமல் வெளிவந்தது மட்டும் தான் இந்த படத்தின் ஹைலைட். பெண்களிடம் மிகுந்த எதிர்ப்பை சம்பாதித்ததால் தோல்வியுற்ற படம்.
சீடன் : திருடா திருடி படத்திற்கு பிறகு சுப்பிரமணிய சிவா - தனுஷ் இணைந்த படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் இக்காலத்தில் தனுஷை சாமியாக வைத்து கதைக்களம் இருந்ததால் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.
மாப்பிள்ளை : ரஜினி நடித்த மாப்பிள்ளை படத்தின் ரீமேக் என்ற எதிர்ப்பார்ப்புடன் வந்த படம். தனுஷ் நடிப்பில் சுராஜ் இயக்கிய படம் என்றாலும் மக்களிடம் வரவேற்பு பெறவில்லை. ஒரு பெருங்கூட்டத்தை நாயகன் அசால்ட்டாக அடிப்பது என்பது போன்ற விஷயங்கள் அதிகமாக இருந்ததால், படம் பார்க்கும் கூட்டத்தை கவரவில்லை.
எங்கேயும் காதல் : ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் வெளியானதில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஜெயம் ரவி நடிக்க பிரபுதேவா இயக்கி இருந்தார். தொய்வான திரைக்கதை அமைப்பு என்பதால் வரவேற்பு இல்லை.
வேங்கை : 'சிங்கம்' பெற்ற வரவேற்பை அடுத்து ஹரி இயக்கத்தில் தனுஷ் நடித்த படம். படத்தின் அடுத்த அடுத்த காட்சி என்ன, வசனம் என்ன, பாடல் எப்போது வரும் என படம் பார்த்தவர்கள் யூகிக்க கூடிய அளவுக்கு காட்சிகள் இருந்ததால்.. இந்த முறை ஹரி.. ரொம்ப் ஸாரி !
ரெளத்திரம் : 'கோ' என்ற வரவேற்பு பெற்ற படத்தினை அடுத்து ஜீவா நடிப்பில் வெளியான படம். வில்லன் பில்டப் ஓவராக வைத்து இறுதியில் வில்லன் யார் என்பதை காட்டும் போது மக்களிடையே சிரிப்பை வரவழைத்த படம். திரைக்கதையில் கவனமின்மையால் மக்களிடையே கவனிக்கப்படாமல் போனது.
வந்தான் வென்றான் : ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை ஆகிய படங்களை தொடர்ந்து கண்ணன் இயக்கத்தில் ஜீவா நடித்த படம். படம் பார்த்தவர்களைக் கவரும் அம்சங்கள் குறைவாக இருந்ததால், வசூலும் குறைவாகவே இருந்தது.
வெடி : தெலுங்கில் ஹிட் அடித்த 'சௌர்யம்’ படத்தை சௌகர்யமாகக் தமிழில் கடத்திய படம். விஷாலின் கேரக்டரில் எந்தப் புதுமையும் இல்லை. 'அவன் இவன்' விஷாலைப் பார்த்துவிட்டு ஆசையாக வெடி பார்க்கப் போன மக்களுக்கு ஏமாற்றம்.
வித்தகன் : டான் அவதாரம் எடுத்து சமூக விரோதிகளை வேட்டையாடும் போலீஸ் 'வித்தகன்’!. போதைப் பொருள் கடத்தல்காரர்களை அரசாங்கம் விடுவிப்பது எப்படி மிலிந்த் சோமனுக்குத் தெரியாமல்போகிறது? அவர்கள் எப்படி பார்த்திபனின் கஸ்டடிக்கு வருகிறார்கள்? அந்தக் கடத்தல்காரர்களின் பாஸ் யார்? என்று எக்கச்சக்க கேள்விகளால்... விளையாட்டுத் துப்பாக்கி ஆகிவிட்டது வித்தகனின் கன்!
ஒஸ்தி :'நான் கண்ணாடி மாதிரிலே’ என நல்லவனுக்கு நல்லவனும் கெட்டவனுக்குக் கெட்டவனுமான அதிரடி அடிதடி 'ஒஸ்தி’ போலீஸ் கதை! இந்த வருட கோட்டாவுக்குத் தமிழ் சினிமாவின் 'போலீஸ் ஸ்டோரி’!. படத்தில் எல்லாரும் பக்கம் பக்கமாகப் பேசித் தீர்க்கிறார்கள். வெளியே வந்த பிறகுதான் தெரிகிறது... உலகம் இவ்வளவு அமைதியானதா என்று?
ராஜபாட்டை :சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த கமர்ஷியல் படம். சரியான கூட்டணி.. ஆனால் தேர்ந்தெடுத்த கமர்ஷியல் கதை தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. விக்ரமிற்கும் சரி, சுசீந்திரனுக்கும் சரி இது நிஜமான 'ராஜபாட்டை' இல்லை.
2011 : தமிழ் திரையுலகின் புதுமுகங்கள்...
தமிழ் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் புதுமுகங்கள் வருகை அதிகமாக இருக்கும். இவ்வாண்டு தமிழ் திரையுலகில் புதுமுக நாயகர்கள் யாருமே பிரகாசிக்கவில்லை.
'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்த சர்வானந்த மட்டுமே இருக்கிறார் என்றாலும் அவர் திரையுலகிற்கு புதியவர் இல்லை.2011 ஆண்டில் திரையுலகிற்கு அறிமுகமாகி சொல்லி கொள்ளும் அளவிற்கு இருந்த புதுமுகங்கள் பற்றிய ஒரு பார்வை:
தியாகராஜன் குமாராஜா (ஆரண்ய காண்டம் ) : எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் ஆரண்ய காண்டம் மாதிரி ஒரு படம் இயக்கி இருக்கிறார் என்பது தான் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. தமிழ் திரையுலக விமர்சகர்கள் மற்றும் இந்தியின் முன்னணி இயக்குனர் அனுராக் காஷ்யப் உட்பட பல இயக்குனர்கள் பாராட்டினார்கள்.
பல்வேறு விருதுகளை பெற்ற இப்படம் தமிழக மக்களிடையே வரவேற்பை பெற விட்டாலும், அடுத்த அடுத்த படங்கள் மூலம் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
எம்.சரவணன் (எங்கேயும் எப்போதும் ) : காமெடி, பாடல்கள், பார்ப்பவர்களுக்கு ஒரு மெசேஜ் என அனைத்தும் கலந்த ஒரு படம். துல்லியமான திரைக்கதை, எதார்த்தமான பாத்திர படைப்பு என படத்தில் கவனமாக அமைத்தது இவரது ஹைலைட்.
படம் பார்த்தவர்கள் மனதில் படத்தின் இறுதியில் வரும் ''அப்பா ப்ளீஸ், வேகமாப் போகாதீங்க'' என்கிற சிறுமியின் குரல் இன்றும் எதிரொலிக்கிறது. அடுத்த படம் ஆர்யாவுடன் கைகோர்த்து இருக்கிறார்.
சாந்தகுமார் (மெளனகுரு ) : கமர்ஷியல் படங்களில் கில்லியான இயக்குனர் தரணியிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சாந்தகுமார். ஆனால் தனது குரு போல் கமர்ஷியல் படம் எடுக்காமல் அமைதியாக 'மெளனகுரு' என்கிற த்ரில்லர் படத்தினை இயக்கி இருக்கிறார்.
சஸ்பென்ஸ் ப்ளஸ் ஆக்ஷன் த்ரில்லரை சுவாரஸ்யமாகப் படைத்த விதத்தில் மௌனமாகவே கவர்கிறான் குரு. அடுத்த அடுத்த படங்கள் மூலம் 2012ல் முன்னணி இயக்குனராக வலம் வருவார் என ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஜிப்ரான் ( 'வாகை சூட வா ' இசையமைப்பாளர்) : ' போறானே.. போனாறானே ' என்று தொடங்கும் வாகை சூட வா படத்தில் வந்த மெலடி பாடலால் ரசிகர்கள் மனதில் வாகை சூடியவர்.
தனது அடுத்த அடுத்த படங்களின் இசை மூலம் வலம் வர உழைத்துக் கொண்டிருக்கிறார்.
சத்யா ('எங்கேயும் எப்போதும்' இசையமைப்பாளர் ) : எங்கேயும் எப்போதும் படத்தின் பாடல்கள் வெளியான போது பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடல் 'மாசமா.. ஆறு மாசமா'. படத்தின் மற்ற பாடல்கள், பின்னணி இசை என இரண்டிலும் அசத்தினார் சத்யா.
பல்வேறு இயக்குனர்கள் சத்யாவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். ஆகையால் 2012ல் தமிழ்த் திரையில் இவரது இசை பங்களிப்பு அதிகமாக இருக்கும்.
அனிருத் (' 3 ' இசையமைப்பாளர் ) : உலகமே WHY THIS KOLAVERI பாடலின் இசையமைப்பாளர் யார் என்று தேடிய போது, தெருவில் கிரிக்கெட் ஆடும் சின்னப் பையன் போலிருக்கும் அனிருத் தான் அது என்றால் ஆச்சர்யப்பட்டார்கள்.
WHY THIS KOLAVERI பாடலுக்கு இசையமைக்க வெறும் 5 நிமிடங்கள் தான் தேவைப்பட்டது என பேட்டியில் தெரிவித்தார். WHY THIS KOLAVERI பாடல் YOUTUBE இணையத்தில் GOLDEN AWARD வென்று இவருக்கு பெருமை சேர்த்தது. 2012 பாலிவுட்டில் கால்பதிக்க இருக்கிறார். முதல் பாலிலேயே சிக்ஸர் !
இனியா ( 'வாகை சூட வா' நாயகி ) : படத்தின் பல காட்சிகளில் தன்னுடைய கண்களால் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். படத்தைப் பாதி தாங்கி நிற்பது அறிமுக நாயகி இனியாவின் அந்த இரண்டு கண்கள்தான். விமலிடம் காசு கறந்து கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுவதாகட்டும், விமலுக்குத் தன் மேல் ஈர்ப்பு இருப்பது தெரிந்ததும் பாவாடையை இடுப்பில் சொருகிக்கொண்டு நொடிக்கு ஒரு எக்ஸ்பிரஷனுடன் ஆடுவதாகட்டும்... வண்டல் தேவதை!
அடுத்து அருள்நிதியுடன் 'மௌனகுரு'. 2012ம் ஆண்டு பாரதிராஜாவின் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்' படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தனுஷ் ( பாடலாசிரியர் ) : மயக்கம் என்ன படத்தில் இளைஞர்களை கவரும் விதத்தில் ' காதல் என் காதல்' என்கிற பாடலை எழுதி பாடினார் தனுஷ். இளைஞர்கள் பலரது மொபைலின் காலர் டியூனாக இருந்தது அந்த பாடல்.
அடுத்ததாக ' 3 ' படத்தில் எழுதி பாடிய WHY THIS KOLAVERI DI பாடல் மூலம் உலகம் அறிந்த பிரபலமாகி விட்டார். பிரதமரின் அழைப்பு, ரத்தன் டாடாவுடன் சந்திப்பு, அமிதாப்பின் பாராட்டு என ஒரே பாட்டின் மூலம் புகழின் உச்சிக்கு போயிருக்கிறார்.
நடிப்பு, பாடலாசிரியரை தொடர்ந்து 2012ல் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். ( 2012 வருஷ டிசம்பர்ல புதுமுக இயக்குனர் லிஸ்ட்ல உங்க பேரு வர வாழ்த்துக்கள் )
சாரா ( தெய்வத்திருமகள் ) : தெய்வத்திருமகள் படத்தில் இவரது நடிப்பை பார்த்து வியக்காதவர்கள் இருக்க முடியாது. அவ்ளோ அழகுப் பாப்பா. அள்ளி அணைத்துக் கொஞ்சத் தூண்டும் துறுதுறுப்பும் அவ்வளவு பாந்தமான நடிப்புமாக... தெய்வத் திருமகள்தான்! விக்ரம் சொல்லும் குழப்பக் கதைகளால் சோர்வுற்றுத் தூங்குவதும், 'குழந்தை’ தகப்பனைச் சமயங்களில் தாயாக அதட்டி வழிக்குக் கொண்டுவரும் சமயத்திலும் நெகிழவைத்தாள் சாரா.
'கிருஷ்ணா வந்தாச்சு... நிலா வந்தாச்சு’ என்று கைகளில் பொம்மை உருவம் வரைந்து இருவரும் பேசிக்கொள்வதும், 'மரம் ஏம்ப்பா பெருசா இருக்கு?’ என நிலா கேட்க, 'அது அப்பா பெருசா இருக்குல்ல’ என விக்ரமும் குழந்தையாகவே பதில் சொல்வதும்... ரசனை அத்தியாயங்கள்! க்ளைமாக்ஸ் நீதிமன்றக் காட்சிகளில் 'நீதான் என்னை விட்டுட்டுப் போய்ட்டே’ என்று கோபித்துக்கொண்டு, பிறகு மெதுவாக முகம் மாறிப் பாசம் வழிய சாரா பார்க்கும் காட்சியும், அதற்கு விக்ரமின் வெகுளி வெள்ளந்தி ரியாக்ஷனும்... ஏ க்ளாஸ்!
கொலவெறி பாடல் குறித்து சில தகவல் துளிகள் ..
அப்பாடல் குறித்து சில தகவல் துளிகள் :
* ' 3 ' படத்தில் இடம் பெற்று இருக்கும் இப்பாடல் அதிகாரபூர்வமாக இல்லாமல் இணையத்தில் வெளியானது. இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக ஆரம்பித்தது.
* ' 3 ' படக்குழுவினர் பாடல் பிரபலமாவதை பார்த்து உடனே WHY THIS KOLAVERI பாடல் மட்டும் அடங்கிய சி.டியை வெளியிட்டார்கள். சோனி நிறுவனம் அப்பாடல் உருவான விதம் என்று தனுஷ் பாடுவதாக அமைந்த வீடியோ பதிவை இணையத்தில் வெளியிட்டது.
* வெளியிட்ட அன்று முதல் கொலவெறி கொண்டு தமிழ்நாடு, இந்தியா என்று அனைத்து தரப்பு இளைஞர்கள் மத்தியில் அப்பாடல் பிரபலமாக ஆரம்பித்தது.
* TWITTER இணையத்தின் TRENDINGல் WHY THIS KOLAVERI என்ற TAG சில நாட்கள் முதல் இடத்தில் நீடித்தது. TRENDINGல் வந்ததால் முன்பை விட அப்பாடல் பிரபலமாக ஆரம்பித்தது.
* அமிதாப்பச்சன் இப்பாடலைக் கேட்டு தனுஷை பாராட்டினார். அவரைத் தொடர்ந்து இந்தி திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். இப்பாடலை எழுதி பாடியது யார் என்று இணையவாசிகள் தேடியதன் மூலம் தனுஷ் மேலும் பிரபலமடைந்தார்.
* YOUTUBE இணையத்தில் உள்ள வீடியோ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதனை படைத்தது. இதுவரை அவ்வீடியோ பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கி கொண்டு இருக்கிறது.
* இப்பாடலை பலரும் பாடி, அந்த வீடியோவை YOUTUBE-ல் பதிவெற்றினர். இப்படி பல வடிவங்களில் WHY THIS KOLAVERI பாடல் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
* FLASH MOB-லும் WHY THIS KOLAVERI பாடல் இடம் பிடித்தது. மும்பையில் நடைபெற்ற FLASH MOB-ல் தனுஷ் பங்கேற்றார். AUCKLAND, BANGALORE ஆகிய இடங்களில் நடந்த FLASH MOB-களிலும் WHY THIS KOLAVERI இடம் பெற்றது.
* WHY THIS KOLAVERI பாடலுக்கு இசையமைக்க வெறும் 5 நிமிடங்கள் தான் தேவைப்பட்டது என பேட்டியில் தெரிவித்தார் இசையமப்பாளர் அனிருத். முதல் பாலிலேயே சிக்ஸர் ! WHY THIS KOLAVERI பாடல் YOUTUBE இணையத்தில் GOLDEN AWARD வென்று இவருக்கு பெருமை சேர்த்தது.
WHY THIS KOLAVERI DI உருவான விதம்
* இந்தி சேனல்கள் நடத்திய இசை நிகழ்ச்சிகளில் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் இருவரும் பங்கேற்றார்கள்.
* டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா தனுஷை அழைத்து தனது பாராட்டினை தெரிவித்தார்.
* இந்திய பிரதமர், சீன பிரதமருக்கு அளித்த விருந்தில் தனுஷ் கலந்து கொண்டதன் மூலம் இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரிந்த நபராக தனுஷ் வலம் வருகிறார். INDIA'S MOST SEXIEST VEGETARIAN வாக்கெடுப்பில் தனுஷ் பெயரும் இடம்பெற்று இருக்கிறது.
* CNN நிறுவனம் TOP SONG OF THE YEAR என்று WHY THIS KOLAVERI பாடலை பாராட்டி இருக்கிறது.
இந்த ஆண்டு துவக்கத்தில் 'ஆடுகளம்' படத்திற்காக தேசிய விருது வென்றவர், ஆண்டு இறுதியில் இப்பாடல் மூலம் பலரைச் சென்றடைந்துள்ளார். தனுஷ் 2012ல் இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கிறார்.
பவர் ஸ்டார் VS (ரஜினி + விஜய்+ ETC..)
2011ம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளிவரவில்லை.
ஆனால் ரஜினி படத்தைப் போலவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் படம் வெளியிட்டு தனது பேட்டி, கெட்டப், டிவிட்டர் பஞ்ச் வசனங்கள் மூலம் தமிழ் திரையுலகினர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன்.இவர் நடிப்பில் வெளிவந்த 'லத்திகா' திரைப்படத்தை 200 நாட்களை கடந்து மகாலட்சுமி திரையரங்கில் ஓட்டினார்கள். பேட்டியில் "நான் தான் காசு கொடுத்து ஒட்டினேன்.. அது எனது ரசிகர்களுக்காக " என பேட்டியளித்தார் பவர்.
தன் ரசிகர்களுக்காகவே தன் நடிப்பில் வெளியான 'லத்திகா'வைத் தொடர்ந்து 'ஆனந்த தொல்லை', 'மன்னவன்', 'திருமா', 'தேசிய நெடுஞ்சாலை', 'மூலக்கடை முருகன்' என வரிசையாக படங்களில் மும்முரமோ மும்முரமாக நடித்து தள்ளுகிறார்.
'பவர் ஸ்டார்' சீனிவாசன் என்ற பெயரில் புதிதாக டிவிட்டர் இணையத்தில் இணைந்துள்ளார். இவரது பஞ்ச்களை எல்லாம் பார்த்து இது ' நிஜ பவர் ஸ்டாரா' என சந்தேகங்கள் முளைத்தபோது, அதை முளையிலேயே கிள்ளி, " அது நானே தான் ! " என்று பேட்டியளித்து, 'ரசிகர்'களை ஆச்சர்யத்திலும் இணையவாசிகளை அதிர்ச்சியிலும் ஆழ்த்தினார்.பல்வேறு வேலைகளுக்கு இடையிலும் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் இணையத்தில் பதிலளித்து வருகிறார் இந்த 'பவர்'.
டிவிட்டர் இணையத்தில் இவர் பண்ணிய மெசேஜுகளைப் பார்த்து திரையுலகமே Freeze ஆகி இருக்கிறது. இவர் யாருக்கு எல்லாம் என்ன மெசேஜ் அனுப்பினார், என்ன விஷயங்களை பகிர்ந்து கொண்டார் என்பது குறித்த சில நட்சத்திரத் தகவல்கள் :
* CHAMMAK CHALLO பாடல் பாடிய AKON விற்கு : உங்களுடன் பணிபுரிய ஆசைப்படுகிறேன். இது தான் எனது டிவிட்டர் அக்கவுண்ட்.
* ஃபேஸ்புக் இணையத்தில் சிம்புவிற்கு பிறகு எனக்கு தான் அதிக ரசிகர்கள் இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
* ரசிகர்களே.. என்னை பிடிக்காத சில பேர் என்னை தவறாக பேசுவதை பார்த்து கோபப்படாதீர்கள். ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான் !
* ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று : எனது அண்ணன் சூப்பர் ஸ்டார் வாழ்க பல்லாண்டு. நீங்க இன்னும் பல படங்க பண்ணனும், அது எனக்கு போட்டியா இருக்கணும்.. ( சூப்பர் ஸ்டார் 'கோச்சடையான்' படத்தை விரைவாக முடிக்க திட்டமிட்டதற்கு பவர் ஸ்டாரின் இந்த மெசேஜ் காரணமில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.)
பவர் ஸ்டார் சீனிவாசனுக்காக ரசிகர்கள் உருவாக்கிய வீடியோ பதிவு :
* மல்லிகா ஷெரவத்திற்கு : ஒஸ்தி படத்தில் நன்றாக ஆடி இருந்தீர்கள். விரைவில் உங்களுடன் ஒரு படத்தில் பணிபுரிய ஆசைப்படுகிறேன்.
* ஜிம்மில் இருந்து வந்து விட்டேன் மிகவும் சோர்வாக இருக்கிறது. ஆனால் எனது வெறித்தனமான ரசிகர்களுக்காக டிவிட்டரில் பேசலாம் என்று வந்தேன்.
* இயக்குனர் ஷங்கர் மற்றும் விஜய் என்னை 'நண்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்து இருக்கிறார்கள். ஆனால் என்னால் போக முடியுமா என்று தெரியவில்லை.
* ராஜபாட்டை படத்தில் எனது பேரை படத்தின் பப்ளிசிட்டிக்காக பயன்படுத்தி இருக்கிறார் விக்ரம்.
* ஆனந்த தொல்லை படத்தில முழுக்க முழுக்க ஆக்ஷன் தான். பயங்கரமான வில்லனா என்னை பாக்க போறீங்க!
* பொங்கல் 2012 அன்று விஜய்யின் 'நண்பன்'. போட்டியாக எனது 'ஆனந்த தொல்லை'.
* பவர் ஸ்டாருக்கு கோபம் வராது தம்பி. பாசத்தால அடிக்கிறவன் தான் இந்த பவர் ஸ்டார்.
டிவிட்டர் இணையத்தில் இவரது ரசிகர்களுக்கு இவரை பற்றி பதிந்து இருக்கும் மிகச் சில 'பஞ்ச்'கள் மட்டும் இங்கே :
* ஆனந்த தொல்லை டிரெய்லரே இப்படின்னா, படம் CHANCELESS... ஆனந்த தொல்லை கண்டிப்பாக நண்பன் மற்றும் பில்லா 2 படத்திற்கு தொல்லையாக இருக்கும்.
* தலைவா.. உங்களுக்கு கத்ரினா கைஃப் தான் சரியான ஜோடி!
* தலைவா.. ஐஸ்வர்யா ராய் கூட எல்லாம் நடிக்க வேண்டாம். அவங்க பொண்ணு கூட நடிங்க. அது தான் உங்களுக்கு கரெக்ட்.
* தல.. கிறிஸ்துமஸ் தாத்தா எனது பரிசு பொருள் கொடுக்கவில்லை என வருத்தப்பட்டேன். நீங்கள் ஆன்லைன்ல இன்றைக்கு வந்துட்டீங்க. எனககு மிகப்பெரிய பரிசு இதுதான்.
* எல்லாரும் அவங்க குடும்பம் அல்லது காதலி போட்டோ தான் பர்ஸ்ல வச்சுருப்பாங்க.. ஆனால் என்னோட பர்ஸ்ல உங்களோட போட்டோ தான் வச்சுருக்கேன். நான் உங்கள் ரசிகன்.. இல்லை இல்லை.. பக்தன்.
லத்திகா படத்தினை தொடர்ந்து ரசிகர்களுக்காக காத்திருக்கும் அடுத்த ஆனந்த தொல்லை:
* நான் நீங்க டிவிட்டர் இணையத்திற்கு வரவில்லை என்று தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருந்தேனா, டக்குனு பார்த்தா ஒரு வாளி ஃபுல்லா கண்ணீர்.!
* உங்களோட அழகை பார்த்து FAIR & LOVELY CREAM-க்கே வெட்கம் வரும்.
* தலைவா.. WORLD PEACE DAY என்றைக்கு கொண்டாடலாம் என்று சொல்லுங்கள்.. அதான் உங்களபிறந்த நாள்...
* படங்களில் கயிறு உபயோகித்து சண்டை போடுங்கள்... உங்களுக்கு ஒன்று என்றால் எங்களால் தாங்கவே முடியாது.
* உங்களை 'நடிகர்' என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் கமல் மாதிரி ஒரு 'பன்முக கலைஞன்'.
* வணக்கம் தலைவா.. நான் உங்களின் தீவிர ரசிகன். எல்லாரும் உங்களின் படத்தை தான் பார்ப்பாங்க. ஆனால் நான் உங்க பட போஸ்டரை 3 மணி நேரம் பார்ப்பேன்.!
* ஆஸ்கர் விருது குழுக்களையும் உங்களது 'லத்திகா' படம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
* சார் உங்களது அடுத்த படத்தில் நீங்கள் 6 பேக்கில் நடிக்கணும்.
* தலைவா... உங்கள் முகத்தில் 10 அஜீத், 23 விஜய், 4 கமல் சாயல் இருக்கு.. 2016ல் நீங்க தான் தல சி.எம்.!
* நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரணும்.. நீங்க வந்தாதான் பவர் கட் பிரச்னை சரியாகும்.
* தலைவா உங்களுக்கு இருக்கிற அழகுக்கு நீங்கள் ஆங்கில படத்தில் கூட நாயகனாக நடிக்கலாம்.
* வானத்துல இருக்கு பல ஸ்டார்.. ஆனால் இங்க டிவிட்டருக்கு ஒரே ஸ்டார் எங்க பவர் ஸ்டார்.
* தீபாவளின்னா சரவெடி.. எங்க பவர் ஸ்டார்னா அதிரடி!
Subscribe to:
Posts (Atom)