Tamil News

Sunday, January 8, 2012

புத்தாண்டில் த்ரிஷாவின் புது காதல்?! (Trisha trashes Rana rumours)


தெலுங்கு நடிகர் ராணாவுடன் எனக்கு காதல் என்று வந்த செய்திகளில் உண்மையில்லை. அவரும் நானும் நல்ல நண்பர்கள். தினமும் அதிகாலை மூன்று மணிக்கு நாங்கள் பேசிக் கொள்வோம், என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா. தெலுங்கில் 'லீடர்' படம் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் டக்குபதி ராணா. இந்திப் படங்களிலும் நடிக்கிறார். தமிழில் 'வடசென்னை' என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் பேரன். நடிகர் நாகார்ஜுனாவின் மருமகன். பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் நிறைய நடிகைகள் இவருக்கு காதல் வலை வீசினர். இப்போதும் யாராவது ஒருவருடன் இவரை இணைத்து கிசுகிசுக்கள் வருவது சகஜமாகிவிட்டது. பிபாஷா பாசு, ஸ்ரேயா, தமன்னா என நிறைய பேருடன் கிசுகிசுக்கப்பட்டுவிட்டார். இப்போது இந்த லிஸ்டில் வந்திருப்பவர் த்ரிஷா. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவெல்லாம் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் புத்தாண்டை கோவாவில் கொண்டாடி விட்டு திரும்பியுள்ளனர். ராணாவை காதலிக்கிறீர்களா? என்று த்ரிஷாவிடம் கேட்டதற்கு, அவர் பதில் கூறுகையில், "சினிமாவில் அறிமுகமானதிலிருந்து என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வந்துவிட்டன. முதலில் எனக்கு அது கஷ்டமாக இருந்தாலும் பிறகு ஈஸியாக எடுத்துக் கொண்டேன். முன்பெல்லாம் அந்த நடிகருடன் சுற்றுகிறேன். இந்த நடிகருடன் சுற்றுகிறேன் என்றுதான் செய்திகள் வந்தன. இப்போது காதல், திருமணம் என்று வருகிறது.

தெலுங்கு நடிகர் ராணாவை எனக்கு பத்து வருடமாக தெரியும். எனக்கு அவர் முக்கியமான நண்பர். அதனால் அவருடன் சேர்ந்து வெளியே போகிறேன். எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் நிறைய பேர் உள்ளனர். எனக்கும் ராணாவுக்கும் காதல் என்று வதந்திகள் பரவியிருப்பது அடிப்படை இல்லாதது. ராணா இனிமையானவர். விருந்துகளில் அதிகாலை மூன்று மணிவரை என்னுடன் இருக்கும் நண்பர் அவர். அவருடன் இருப்பது இனிமையாக இருக்கும். 10 வருஷமாக நாங்கள் பழகுகிறோம். இந்த மாதிரி எத்தனை நண்பர்களை பார்க்க முடியும்? ஒரு நண்பராக அவரை நான் 'லவ்' பண்றேன்! சினிமாவில் சாதிக்க நிறைய இருக்கிறது. இப்போது திருமணம் எனக்கு முக்கியம் அல்ல. திருமணம் முடிவானதும் அதை பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக தெரிவிப்பேன். ரகசிய திருமணம் செய்து கொள்ளமாட்டேன்," என்றார். இது எத்தன நாளைக்கோ...?

No comments:

Post a Comment