'மைனா' படத்தின் மூலம் தனக்கென்று ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்த விதார்த், தனது 'கொள்ளைக்காரன்' படத்தின் மூலம் விஜய்யுடன் மோத இருக்கிறார். விதார்த், சஞ்சீதா ஷெட்டி நடிப்பில் புதுமுக இயக்குநர் தமிழ்ச்செல்வன் இயக்கியிருக்கும் 'கொள்ளைக்கரான்' படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் ஜோஹன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஈர்க்க, இப்படம் தனக்கு ஒரு நல்ல படமாக அமையும் என்ற நம்பிக்கையில் விதார்த் இருக்கிறார். அவருடைய நம்பிக்கை வீண்போகாது என்பது போலத்தான் இப்படத்தின் வெளியீடும் அமைந்திருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்கள் எதாவது வெளியாகிறதா இல்லையா என்று பார்த்துதான் புதுமுகங்கள் அல்லது வளரும் கலைஞர்களின் படங்களை வெளியிடுவார்கள். ஆனால், விதார்த்தின் 'கொள்ளைக்காரன்' படக்குழுவினர் பெரிய படமோ, பெரிய நடிகரோ கதைதான் முக்கியம். எங்கள் கதையின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்ற கூறி விஜய்யின் 'நண்பன்' வெளியான அடுத்த நாளான ஜனவரி 13-ம் தேதியன்று படத்தை வெளியிடுகிறார்கள். ஷங்கர், விஜய் என்று இந்த பெரிய கூட்டணியில் உருவாகியிருக்கும் 'நண்பன்' படத்தோடு மோத இருக்கும் விதார்த்தின் 'கொள்ளைக்காரன்' படத்திற்கு திரையரங்க உரிமையாளர்களிடம் இருந்தும் ஏகப்பட ஆதரவு கிடைத்திருக்கிறது. அதனால் தான் தமிழகமெங்கும் 250 திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகிறார்கள்.
கொள்ளைக்காரனுக்கு தில்லு கொஞ்சம் ஜாஸ்திதான்!
No comments:
Post a Comment