Tamil News

Sunday, January 8, 2012

தனுஷ், ஸ்ருதி 'கொலவெறி' ஆட்டம்! (Southern star Dhanush shoots for 'Kolaveri Di' song )

'3' படத்திற்காக தனுஷ் எழுதி பாடியிருக்கும் 'கொலவெறி டி' பாடல் காட்சி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்பாடல் காட்சிக்கான படப்பிடிப்பில் தனுஷும், ஸ்ருதியும் ஆட்டம் போட்டு வருகிறார்கள். தனுஷின் இந்த 'கொலைவெறி டி' பாடல் காட்சியின் படபிடிப்பை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா தனுஷ். மேலும் இந்த பாடல் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருப்பதால், பாடல் உருவாக்கும் விதத்தை கவனமாகவும், ரசிகர்களை ஈர்க்கும் வகையிலும் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படப்பிடிப்பில் ஐஸ்வர்யா தனுஷுடன், நாயகன் தனுஷ் மற்றும் நாயகி ஸ்ருதி கலந்து கொண்டு ஆட்டம் போட்டிருக்கிறார்கள். என்னைக்குத்தான் அடங்கப்போகுதோ இவிங்களோட கொலவெறி....?




No comments:

Post a Comment