ஹொலிவுட்டில் பிரபலமான ஜேம்ஸ் பொண்ட் திரைப்படத்தின் புதிய அத்தியாயம், இந்தியாவில் பதிவு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.புதுடில்கியில் உள்ள தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்காக இந்திய அரசாங்கத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் காட்சிகள், மும்பை, டெல்கி மற்றும் கொவா ஆகிய பிரதேசங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இதற்கு முன்னர் வெளியான ஜேம்ஸ் பொண்ட் திரைப்படம் ஒன்றும் இந்தியாவில் காட்சிப்படுத்தப்படடுள்ளன.1983ம் ஆண்டு ஜுன் மாதம் வெளியான ஒக்டோபுசி என்ற ஜேம்ஸ் பொண்ட் திரைப்படத்தின் சில காட்சிகள் இந்தியாவில பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில் தற்போது 23வது ஜேம்ஸ் பொண்ட் திரைப்படமாக அமைகிறது.
ஏற்கனவே 2006ம் மற்றும் 2008ம் ஆண்டுகளில் வெளியான கெசினோ நோயல் மற்றும் கோன்டம் ஒப் சோலாஸ் ஆகிய ஜேம்ஸ் பொண்ட் படங்களில் கதாநாயகனாக நடத்த டேனியல் கிரேக் இந்த படத்திலும் கதாநாயகநாக நடிக்கவுள்ளார்.
எதிர்வரும் 2012ம் ஆண்டு நொவம்பர் மாதம் 9ம் திகதி இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.
No comments:
Post a Comment