தான் நடித்து வரும் புதிய படமான இஷ்டம் படத்திற்காக தனது தோற்றத்தை மாற்றியிருக்கிறார் நடிகர் விமல். களவாணி படத்தின் மூலம் வெற்றிநாயகனாக வலம் வந்தவர் நடிகர் விமல். இன்றும் களவாணி விமல் என்று அழைக்கப்பட்டு வரும் இவர், புதிதாக இஷ்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவரது ஜோடியாக நிஷா அகர்வால் நடிக்கிறார். படத்தில் இடம்பெறும் ஒரு முத்தக்காட்சிக்கு 10 டேக் வாங்கிய செய்தி சமீபத்தில் வெளியானது. அந்த செய்தியின் சூடு குறைவதற்குள் இஷ்டம் படம் குறித்து புதிய செய்தியொன்றும் வெளியாகியிருக்கிறது.
அதாகப்பட்டது, படத்தில் விமல் சாப்ட்வேர் என்ஜினீயராக நடிக்கிறாராம். இதற்காக அவர் தனது தோற்றத்தை நாகரீக இளைஞன் போல் மாற்றிக்கொண்டார். இதற்காக தனது மீசையை இழந்திருக்கும் விமல், படம் முழுக்க அந்த தோற்றத்திலேயே தோன்றவிருக்கிறாராம். படத்தில் இன்னொரு ஜோடியாக அனூப் - பார்வதி நிர்பான் நடிக்கிறார்கள். இவர்களுடன் சார்லி, சந்தானம், செம்புலி ஜெகன், கராத்தே ராஜா, யுவராணி, உமாபத்மநாபன் ஆகியோரும் நடிக்கிறார்கள். வேகமாக வளர்ந்து வரும் இப்படத்துக்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்ககிறார் டைரக்டர் பிரேம் நிசார்.
No comments:
Post a Comment